ராமநாதபுரம்:பருவமழை பொய்த்ததால், ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் இன்றி 3,000க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் முடங்கியுள்ளன. கூலி தொழிலாளிகள் மாற்றுப்பிழைப்பு தேடி வெளியூர் செல்லும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. காவனூர், பாண்டியூர், தொருவளூர், மஞ்சூர், புல்லங்குடி, காருகுடி உள்ளிட்ட பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்டோர், செங்கல் சூளைகளை குடிசை தொழிலாக நடத்தி வருகின்றனர்.
இவற்றை நம்பி 30 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.வைகை ஆற்றை ஒட்டியுள்ள கரையோரங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும், வண்டல் மண்ணில் செங்கல் கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், ஆறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் நல்ல தண்ணீரில், தயாரிக்கப்படுவதால் நீண்டநாள் உழைக்கும் தன்மை உள்ளதாக நம்பப்படுகிறது. இதனால், இந்த ஊர்களின் செங்கற்களுக்கு கிராக்கி உள்ளது.
காவனூர், செங்கல் சூளை உரிமையாளர், கே.பஞ்சவர்ணம் கூறியதாவது: ஒரு செங்கல் விலை 4 ரூபாய். வாடகை, ஏற்று, இறக்கு கூலி உட்பட ஒரு லோடு (4000 கல்) 20 ஆயிரம் ரூபாய். எந்தாண்டும் இல்லாத அளவிற்கு கடந்தாண்டு பருவ மழை பொய்த்தால், கண்மாய்கள் மற்றும் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொழில் இன்றி வாடி வருகின்றன. பலர் சூளைகளை நிரந்தரமாக மூடிவிட்டனர். பலர் விவசாய பணிக்கும், மதுரை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி குடும்பத்தோடு சென்றுவிட்டனர், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.