புதுச்சேரி: தென்னிந்திய அளவிலான குதிரையேற்றப் போட்டி, வரும் 1ம் தேதி, ஆரோவில்லில் துவங்குகிறது.ஆரோவில் ரெட் எர்த் குதிரையேற்றப் பள்ளி நிர்வாகி ஜாக்குலின் நிருபர்களிடம் கூறியதாவது:தென்னிந்திய அளவிலான 13வது குதிரையேற்ற போட்டி ஆரோவில்லில், வரும் பிப்ரவரி 1ம் தேதி மாலை துவங்கி, 3ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகள் காலை 6 மணியிலிருந்து 10 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையிலும் நடக்கிறது. போட்டியில் 250 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். தென் மாநிலங்களில் இருந்து நூறு குதிரைகளும், ஆரோவில் ரெட் எர்த் பள்ளியிலிருந்து 20 குதிரைகளும் பங்கேற்கின்றன.தேசிய சாம்பியன்கள் நிதின்குப்தா, அஜய்அப்பச்சு உள்ளிட்ட பல முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர்.போட்டிகள், 12 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், 12-14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்டோர், 22 வயதிற்குட்பட்டோர் மற்றும் 22 வயதிற்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. குழுப் போட்டியில் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் புதுச்சேரி சார்பிலும் வீரர்கள் பங்கேற்கின்றனர்.போட்டியில் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 3ம் தேதி மாலை பேஷன் ஷோ நடக்கிறது. உலக அளவில் பிரசித்திப் பெற்ற பேஷன் டிசைனர்கள், மாடல்கள் பங்கேற்கின்றனர்.குதிரையேற்ற ஆர்வத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்த இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. @பாட்டிகளை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.இவ்வாறு ஜாக்குலின் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.