புதுடில்லி: டில்லியில் நடந்த போராட்டத்தின்போது, போலீஸ் கான்ஸ்டபிள் சுபாஷ் தோமர், உயிரிழந்தது குறித்த வழக்கில், டில்லி போலீசுக்கு ஐகோர்ட், கண்டனம் தெரிவித்துள்ளது.டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் இறந்த சம்பவத்தை எதிர்த்து, பெரும் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த, டில்லி போலீஸ் கான்ஸ்டபிள், சுபாஷ் தோமர், மர்மமான முறையில், உயிரிழந்தார்."போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடத்திய தாக்குதலால் தான், தோமர் உயிரிழந்தார்' என, டில்லி போலீஸ் கமிஷனர், நீரஜ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், "போராட்டம் நடந்தபோது, தோமர், திடீரென மயங்கி விழுந்தார். மாரடைப்பு காரணமாக, அவர் இறந்திருக்கலாம்' என்றனர்.இதையடுத்து, பன்சால் என்ற வழக்கறிஞர், டில்லி ஐகோர்ட்டில், தாக்கல் செய்த மனு:போலீஸ்காரர் தோமர் இறந்த வழக்கில், டில்லி போலீஸ் கமிஷனரும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும், மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி, ஜே.பி.மிட்டல் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:டில்லி போலீஸ் தரப்பில், போலீஸ் கமிஷனர் தான் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, ஏற்கனவே, இந்த கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உதவி கமிஷனர் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கோர்ட்டின் கேள்விகளுக்கு, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பதில், சரியானதாக இல்லை. இந்த விவகாரத்தில், உரிய நடைமுறையை, டில்லி போலீசார், பின்பற்றாதது, கண்டனத்துக்குரியது.முறையான நடைமுறையை பின்பற்றத் தவறினால், டில்லி போலீஸ் கமிஷனர் மீது, கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கு, சம்மனும் அனுப்ப வேண்டியிருக்கும். டில்லி போலீஸ் கமிஷனர், கோர்ட்டுக்கு நேரில் வந்து, பதில் அளிக்க வேண்டியிருக்கும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.