புதுடில்லி: மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கை, வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட், நேற்று தள்ளுபடி செய்தது.டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டார். பின், சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையில் இறந்தார். இந்த வழக்கில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், முகேஷ் என்பவர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில் கூறப்பட்டதாவது:இந்த வழக்கின் விசாரணை, டில்லியில் நடந்தால், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்காது. குற்றம் சாட்டப்பட்ட, எங்களின் உயிருக்கும், ஆபத்தான சூழல் நிலவுகிறது. இதனால், இந்த வழக்கின் விசாரணையை, டில்லிக்கு வெளியில், வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, முகேஷ் சார்பில், எம்.எல்.சர்மா, வி.கே.ஆனந்த் என, இரண்டு வக்கீல்கள் ஆஜரானதால், குழப்பம் ஏற்பட்டது.இதையடுத்து, இந்த வழக்கில், முகேஷ் சார்பில் ஆஜராகும் வக்கீல் யார் என்பதை, விசாரித்து கூறும்படி, டில்லி செசன்ஸ் கோர்ட்டுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, செசன்ஸ் கோர்ட், முகேஷிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி, அதன் விவரத்தை, சீலிடப்பட்ட உறையில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் முன், இந்த மனு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, முகேஷ் சார்பில் ஆஜராவதற்கு, வக்கீல் சர்மாவுக்கு, யாரும் அதிகாரம் அளிக்கவில்லை. குற்றச்சாட்டுக்கு ஆளான முகேஷ், இந்த தகவலை செசன்ஸ் கோர்ட்டில் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கை, டில்லிக்கு வெளியில், வேறு மாநிலத்தில் நடத்தக் கோரி, தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.