E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பெண் நோயாளியை கற்பழித்த டாக்டருக்கு 10 ஆண்டு சிறை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
23:13

தானே: மும்பையில், மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட, 30 வயது பெண்ணை கற்பழித்த இளம் டாக்டருக்கு, உள்ளூர் கோர்ட், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.மகாராஷ்டிரா மாநிலம், நவிமும்பையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம், தானே கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர், சந்தியா பச்சாவ் வாதிடுகையில் கூறியதாவது:கடந்த, 2010 அக்டோபர், 16ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண், தன் குழந்தை, கணவர் மற்றும் உறவினர்களுடன், தானே மாடர்ன் கல்லூரி மைதானத்தில் நடந்த துர்கா பூஜையில் பங்கேற்க வந்தார். அப்போது அப்பெண்ணுக்கு, திடீர் சுகவீனம் ஏற்பட்டது. உடனடியாக, அருகில் இருந்த லோட்டஸ் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.அவரது, உடல் நிலை மோச மாக இருந்ததால், அன்றிரவு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை முடிந்து, உடன் ஒரு நர்ஸ் மட்டுமே இருந்துள்ளார்.அந்த நர்சுக்கு ஆஸ்துமா நோய் பாதிப்பு இருந்தது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் டாக்டர் விஷால் வான்னே, அந்த நர்சை, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறி ஓய்வு எடுத்து கொள்ளும்படி கூறியுள்ளார்.அந்த நர்ஸ் சென்றதும், நோயாளியாக சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு, டாக்டர் ஊசி போட்டு உள்ளார். இதையடுத்து, அப்பெண் மயக்க நிலையில் இருந்துள்ளார். நள்ளிரவு தாண்டியதும், 2:00 மணிக்கு தீவிர சிகிக்சை பிரிவிற்குள் சென்ற டாக்டர், உள்பக்கமாக கதவை பூட்டியுள்ளார். பின், அங்கிருந்த நோயாளி பெண்ணை கற்பழித்துள்ளார்.இவ்வாறு, அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில், "அன்றிரவு உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது; சத்தம் போடவோ, உதவிக்கு அழைக்கவோ முடியாத நிலையில் இருந்தேன். அடுத்த நாள் காலை, இரவில் நடந்ததை அனைத்தையும் கணவரிடம் தெரிவித்தேன். பின், டாக்டர் விஷால் வான்னே போலீசில் ஒப்படைக்கப்பட்டார்' என, குறிப்பிட்டுள்ளார்.அப்பெண்ணின் கணவர், கோர்ட்டில் சாட்சியம் அளிக்கையில் கூறியதாவது:என் மனைவியின் நிலையை அறிந்து கொள்வதற்காக, தீவிர சிகிச்சை பிரிவில், இரண்டு முறை நுழைய முயன்றேன்; கதவு உள்ளே பூட்டப்பட்டு இருந்ததால், செல்ல முடியவில்லை. உள்ளே நடப்பது தெரியாத அளவுக்கு, திரையிடப்பட்டு இருந்தது.தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மற்றொரு நோயாளி, சம்பவம் நடந்தபோது, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.இவ்வாறு, அவர் சாட்சியம் அளித்தார்.பணியில் இருந்த நர்ஸ் அளித்த சாட்சியத்தில், "நள்ளிரவுக்கு முன் வெளியேறினேன்; பின், அடுத்த நாள் காலை, 5:30 மணிக்கு தான் தீவிர சிகிச்சை பிரிவில் நுழைந்தேன்' என, குறிப்பிட்டார்.அனைத்து சாட்சியங்களையும் கேட்ட நீதிபதி, ஆர்.டி. சவாந்த், டாக்டர் விஷால் வான்னேக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், மேலும், ஆயிரம் ரூபாய் அபராதமும் அளித்து தீர்ப்பு அளித்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.