Doubt Dhanabal | 'டவுட்' தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 29, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'டவுட்' தனபாலு

பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா: தீவிர ஆலோசனைக்கு பின், நானும், மோடியை தான் பிரதமர் வேட்பாளராக கட்சி அறிவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். அத்தகைய முடிவை கட்சி எடுத்தால், அது, வாக்காளர்களிடம் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும். 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும்.

டவுட் தனபாலு: பிரதமர் பதவிக்கான போட்டியில நீங்க இல்லை... ஆனா, ஏற்கனவே, நிதியமைச்சரா இருந்த நீங்க, மறுபடியும் தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தா, அந்த
பதவியை பிடிக்க ஆசைப்பட்டு, இப்பவே, மோடிக்கு, "சோப்பு' போடுறீங்களோன்னு தான், எனக்கு, "டவுட்!'

பிரதமர் மன்மோகன் சிங்: இளைய சமூகத்தின் எழுச்சிமிகு சக்தியை, நேர்பாதையில் வழிநடத்தி சென்றால், நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்.

டவுட் தனபாலு: கட்சியில, ராகுலை துணை தலைவரா கொண்டு வந்து, உங்க இடத்தை நிரப்ப தயாராயிட்டாங்க... அடுத்த முறை தேர்தல்ல ஜெயிச்சாலும், பிரதமர் பதவி உங்களுக்கு இல்லைங்கிறது உறுதியாகிட்டதால, "இளைஞர்களால தான், சவால்களை எதிர்கொள்ள முடியும்'னு ஒதுங்குறீங்களோன்னு, எனக்கு, "டவுட்!'

பத்திரிகை செய்தி: டில்லி கற்பழிப்பு வழக்கில், 17வயதான, ஆறாவது குற்றவாளியை, "மைனர்' என, சிறார் நீதி வாரியம் உறுதி செய்துள்ளது. ஆறு பேரில் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படும் இந்த நபர், சட்டப்படி மைனர் என்பதால், சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டு, தண்டனை எதுவுமின்றி, அடுத்த மூன்று மாதங்களில் விடுதலை செய்யப்பட உள்ளார்.

டவுட் தனபாலு:
சபாஷ்... சரியான முடிவு... 17 வயசுலயே கொடூரமான கற்பழிப்புல ஈடுபட்ட, அந்த, "மைனர்' மூணு மாசத்துல வெளியில வந்து, திருந்தி, மகானா மாறிடுவாரா...? அவர் மேஜரானாலும், "மைனர்' சேட்டையை தொடராம இருப்பாரான்னு தான், எனக்கு, "டவுட்!'

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
30-ஜன-201323:56:36 IST Report Abuse
Cheenu Meenu அப்போ மைனர் பசங்க இந்த தீர்ப்பைவைத்து பன்னிரண்டு வயதுமுதல் பதினேழு வயதுவரை கற்பழிப்பு குற்றம் செய்தால் ர வெறும் மூன்று மாத தண்டனையுடன் வெளியில் வந்து விடலாம். ருசி கண்ட மைனர் பூனை ஊரில் சும்மா வலம் வருமா ? மன்மோகன் சிங் இளைஞராக இருந்தபோது இவர்களை நேர்வழி நடத்த வல்லவர்கள் இல்லாமல் தான் காங்கிரஸ் கட்சி இருந்ததா?
Rate this:
Share this comment
Cancel
mathan - coimbatore,இந்தியா
30-ஜன-201312:57:06 IST Report Abuse
mathan மைனர் குஞ்ச சுடனும்
Rate this:
Share this comment
Cancel
M.Srinivasan - SADHURVEDHAMANGALAM,இந்தியா
30-ஜன-201312:35:18 IST Report Abuse
M.Srinivasan "அந்த" மாதிரி கேஸ்ல சான்றிதழை பார்த்துவிட்டு முடிவெடுக்க கூடாது. அவன் மொக லட்சனத்த பார்த்தாலே தெரியுமே தீர்ப்பு தெளிவா சொல்லலாமே........ இதுல ஏதோ உள்குத்து இருக்கு
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
30-ஜன-201312:30:49 IST Report Abuse
anandhaprasadh கற்பழித்தவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்படுவார்'னு சொல்றீங்களே... இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா "கற்பழிக்கப்பட்டவர் மைனர் என்பதால் குற்றவாளி விடுதலை செய்யப்படுகிறார்'னு நீங்க சட்டத்தை "இன்னும் பவர்புல்'லா" மாத்திடுவீங்களோ'ன்னு எனக்கு டவுட்...
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30-ஜன-201312:12:04 IST Report Abuse
சு கனகராஜ் இந்த தலையாட்டி வேலை செய்வதை விட சோனியாவின் மகனிடம் அதை ஒப்படைத்து விட்டு ஒய்வு எடுப்பதே மேல் என்று நினைத்து இருப்பார் இந்த பொருளாதார மேதை
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30-ஜன-201312:11:02 IST Report Abuse
சு கனகராஜ் ஆறு பேரில் அதிக கொடுமை செய்து பலாத்காரம் செய்தவனுக்கு வயதை காரணம் காட்டி விடுதலை என்பதை யாராலும் ஏற்க முடியாது. சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து வெளியே வருவதற்கு தான் நெறைய வழிகள் உள்ளன. அதனை அடைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30-ஜன-201312:09:43 IST Report Abuse
சு கனகராஜ் சின்ஹா மோடி பிரதமராக அறிவிக்கலாம் என்கிறார் ராஜ்நாத்சிங் மோடிக்கு ஆதரவு என்கிறார். சுஷ்மா தேர்தல் முடிந்ததும் பார்த்து கொள்ளலாம். அதாவது பிரதம் ரேசில் தானும் இருக்கிறேன் என்று சொல்கிறார். மோடியை ஐக்கிய ஜனதா தளம் எதிர்க்கிறது. எல்லாவற்றிகும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Asokaraj - Doha,கத்தார்
30-ஜன-201311:40:50 IST Report Abuse
Asokaraj கற்பழித்த நமது 17 வயது நண்பர், மகான் ஆவாரோ இல்லையோ...நிச்சயம் உத்திரபிரதேஷிலிருந்து ஒரு எம் பி யாகத் தேர்வு செய்யப் பட்டு, அதுவும் இதே காங்கிரஸ் கட்சியில், விரைவில் மத்திய மந்திரி சபையில் இடம் பெறுவார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. வாசகர்களே இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நடக்கிறதா இல்லையா பாருங்கள். முன்னால் மந்திரியை கொலை செய்தவர்களே மந்திரி ஆன பிறகு.......
Rate this:
Share this comment
Cancel
Jayakumar - Nellai  ( Posted via: Dinamalar Android App )
30-ஜன-201308:16:21 IST Report Abuse
Jayakumar ஓகோ மைனரா இருந்தால் இவ்வளவு சலுகை உண்டா நல்ல அரசு நல்ல முடிவு வாழ்க ஐனநாயகம் உருப்படும்
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
30-ஜன-201308:06:27 IST Report Abuse
Prabhakaran Shenoy எதிர்காலத்தில் 'SIN' HAA (இந்தியில் ஆம் என பொருள்) போன்றவர் நிதி அமைச்சராக வராமல் இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம், ஒரு வேளை எங்களது விருப்பத்தையும் மீறி அவர் வந்தால் அது இந்தியாவின் SIN.
Rate this:
Share this comment
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
30-ஜன-201318:22:00 IST Report Abuse
E.V. SRENIVASANபசி பசி என்று மக்களை அலையவிடும் ஒருவர் இப்பொழுது நிதியமைச்சராக இருக்கும்பொழுது அவருக்கு சின்கா ஒன்றும் குறைந்தவரல்ல. குறைந்த பட்சம் கொள்ளை அடிக்காமல் அடிப்பவர்களுக்கு துணை போகமளாவது இருப்பார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை