புதுடில்லி: பெற்ற மகளை கற்பழித்து, அந்த குற்றத்திற்கான தண்டனை காலத்தில், பரோலில் வெளியே வந்து, மனைவியையும், மகளையும் கொலை செய்த கொடியவனுக்கு, ஐகோர்ட் வழங்கிய மரண தண்டனையை, சுப்ரீம் கோர்ட் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் மாநிலத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்தது. 1999ல், தான் பெற்ற மகள், மைனராக இருக்கும் போது, தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதை கண்ட தாய், கணவன் மீது போலீசில் புகார் தெரிவித்தார்.சிறையில் அடைக்கப்பட்ட, இப்போது, 48 வயதாகும், மொகிந்தர் சிங் என்ற அந்த கொடூரனுக்கு, 2001ல், ஆயுள் தண்டனை விதித்து, பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவிட்டது. தண்டனை காலத்தில், 2006ல், பரோலில் வெளியே வந்த அவன், கற்பழித்த மகளையும், சாட்சியம் கூறி தண்டனை பெற்று தந்த மனைவி, வீணாவையும் வெட்டி கொன்றான்.இதையடுத்து, அவனுக்கு, பஞ்சாப் ஐகோர்ட், மரண தண்டனை விதித்தது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் அவன் மேல் முறையீடு செய்தான். அந்த வழக்கு, நீதிபதிகள், இப்ராகிம் கலிபுல்லா, பி.சதாசிவம் ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன், கடந்த, 28ம் தேதி விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் தங்கள் உத்தரவில், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தனர். அது குறித்து அவர்கள் வழங்கிய தீர்ப்பில், "இந்த வழக்கு ஒன்றும், அரிதிலும் அரிதானது அல்ல; தண்டனை பெற்று தந்த மனைவியையும், மகளையும் பழிவாங்கவே அவர்களை கொலை செய்துள்ளான். இதில், அரிதான செயல் எதுவும் இல்லை. எனவே, மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக் கப்படுகிறது' என தெரிவித்தனர்."மிகவும் கொடூரமான முறையில், மைனர் மகளை கற்பழித்து, பின் அந்த பெண்ணையும், மனைவியையும் கொலை செய்தவன் மீது சுப்ரீம் கோர்ட் கருணை காட்டியுள்ளது சரியான தீர்ப்பல்ல' என, பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.