ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், விலங்குகள் சரணாலய புலிக்குட்டிகளுக்கு, மாநில பெண் அமைச்சர், தன் பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளார். இந்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியதும், பெயர்கள் மாற்றப்பட்டன.காங்கிரசை சேர்ந்த முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசில், வனத்துறை அமைச்சராக இருப்பவர், பினாகக். இவர், அங்குள்ள ரத்தம் போர் விலங்குகள் சரணாலயத்தில் வளர்ந்து வரும், 1 வயதே ஆன, பெண் புலிக்குட்டிகளுக்கு, பினா - 1, பினா - 2 என, தன் பெயரை சூட்டினார்.வனத்துறை அமைச்சரான அவரின் கட்டுப்பாட்டில் உள்ள சரணாலய புலிக்குட்டிகளுக்கு, பெயர் சூட்டும் உரிமை அவருக்கு உள்ளது என, சரணாலய அதிகாரிகள் நினைத்தனர்.ஆனால், எதிர்கட்சியான பாரதிய ஜனதா இதை கடுமையாக கண்டித்தது. அக்கட்சி செய்தி தொடர்பாளர், ஜோதி கிரண், ""அணைகள், சாலைகள், தெருக்கள் என அனைத்திற்கும், அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு விட்டன. இப்போது, விலங்குகளுக்கும் தலைவர்கள் பெயர் வைப்பதா?'' என, எதிர்ப்பு தெரிவித்தார்.மாநில பத்திரிகைகளிலும் இந்த விவகாரம் பெரிதானதும், அதிர்ச்சி அடைந்த பெண் அமைச்சர் பினா, அந்த புலிக்குட்டிகளை, சரிஸ்கா விலங்குகள் சரணாலயத்திற்கு மாற்றும்படி உத்தரவிட்டதுடன், பெயரையும் மாற்றி கொள்ள அதிகாரிகளுக்கு அனுமதித்தார்.எனினும், அவருக்கு கோபம் தாங்கவில்லை; அவர் கூறியதாவது:அந்த புலிக்குட்டிகள் எனக்கு மிகவும் இஷ்டமானவை. அதன் தாய், பிரசவத்தின் போது இறந்து விட்டது. என் உத்தரவின் படி, அவற்றை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தோம். அவற்றை அடிக்கடி பார்க்க சென்ற போது, "பினா' என, அழைத்தேன். அந்த பெயர் நன்றாக இருக்கிறது என, பலரும் கூறியதால், அந்த பெயரே நிலைத்து விட்டது. இதில் என்ன தவறு இருக்கிறது?விலங்குகளுக்கு பெயர் சூட்டுவது நல்ல விஷயம். அவற்றை பெயர் கூறி அழைக்காமல், எண்களில் அழைப்பது சரியாக படவில்லை. அதனால் தான், பெயர் வைத்தேன். இதை பொறுத்து கொள்ள முடியாதவர்கள், பிரச்னையை கிளப்பி விட்டனர்.வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு, எண் சொல்லி அழைப்பதில்லை; அவற்றை செல்லப் பெயர்களில் தான் அழைக்கிறோம். அப்படி தான், அந்த பெண் புலி குட்டிகளுக்கு, என் பெயரை வைத்தேன். பிரச்னை ஏற்பட்டதும், பெயரை மாற்ற உத்தரவிட்டு விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.சரிஸ்கா விலங்குகள் சரணாலயத்தில், அந்த இரு பெண் புலிக்குட்டிகளுக்கும், "பி - 1' மற்றும் "பி - 2' என, பெயர் மாற்றப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.