புதுடில்லி: டில்லி திகார் சிறை பெண் கைதிகள், காலை, மாலை நேர உணவுகள் தயாரித்து, கார்ப்பரேட் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்க உள்ளனர்.இந்த சிறையிலிருந்து காலை, மாலை வேளைகளில், "டிபன்' தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமையல் கலையில் சிறந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கைதிகள், இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.முதற்கட்டமாக, 150 முதல், 200 பேருக்கு, இரு வேளையும் உணவு வழங்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சமையல் செய்ய தகுதியான பெண் கைதிகள் மற்றும் தேவையான பாத்திரங்கள், பொருட்கள் போன்றவற்றை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சிறை துறை அதிகாரிகள், சில முக்கிய அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சென்று, "ஆர்டர்' பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.டிபன் தயாரிப்பு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு, குறைந்தபட்ச கூலி எவ்வளவு கொடுக்க வேண்டும், உணவு பொருட்களுக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்வது போன்ற முடிவுகள், இன்னும் ஒரு சில நாட்களில் எடுக்கப்பட உள்ளது. அதன் பிறகு, டிபன் தயாரிப்பு பணி துவங்கும்.""சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு, பொழுது போக்குடன், வருவாயும் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், அவர்கள் மத்திலும் இத்திட்டத்திற்கு வரவேற்பு உள்ளது,'' என, சிறை செய்தி தொடர்பாளர் சுனில் குப்தா நேற்று முன்தினம் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.