மும்பை: மும்பை மாநகராட்சி பகுதியில் பெருகி வரும் கொசு தொல்லையை ஒழிக்க முடியாமல், சோர்ந்து போயுள்ள மாநகராட்சி நிர்வாகம், கடைசி கட்ட முயற்சியாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம், "நாசா'வின் உதவியை நாட உள்ளது.நாட்டின் பெருநகரங்களில் ஒன்றான மும்பையில், நாளுக்கு நாள் பெருகும் மக்கள்தொகையால், அதிகமாக சேரும் குப்பை, கூளங்களால் கொசு தொல்லை அதிகரித்து விட்டது. கொசுக்களை அழிக்க மாநகராட்சி நிர்வாகம் இது வரை மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.இதையடுத்து, அமெரிக்காவின், "நாசா' தொழில்நுட்பத்தை பின்பற்ற, மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கொசுக்களை அழிப்பதற்காக, "நாசா' தயாரித்துள்ள இயந்திரம், பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுகிறது."அந்த இயந்திரங்களை மும்பையில் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்' என, தேசிய மலேரியா நோய் ஒழிப்பு நிறுவனமும் உறுதி அளித்துள்ளது. உடலின் வெப்பம் மற்றும் நாற்றத்தால் ஈர்க்கப்படும் கொசு, தேடி வந்து கடிப்பதை தடுக்கும் விதத்தில், இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த இயந்திரத்தில் உற்பத்தியாகும், கார்பன் - டை - ஆக்சைடு, கொசுக்களை உள்பக்கமாக ஈர்க்கும்; உள்ளே வரும் கொசுக்கள் மீது அதிக உஷ்ணம் பாய்ச்சப்பட்டு, அவை கொல்லப்படும் என்பது தான், இந்த இயந்திரத்தின் தொழில்நுட்பம். இதன் விலை, 10 லட்ச ரூபாய். முதற்கட்டமாக, ஏழு இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த கருவிகள், மும்பையில் வெற்றி பெறுமானால், நாட்டின் பிற நகரங்களிலும் பயன்படுத்தப்படலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.