ஜோர்ஹாத்: பிற யானைகளுடன் வனத்தில் தேடுதல் வேட்டைக்கு சென்ற யானை, திடீரென கோபமடைந்து, தன் பாகனை மிதித்து கொன்றது.அசாம் மாநிலத்தில் உள்ள, கசிரங்கா தேசிய பூங்காவில், ஏராளமான காண்டாமிருகங்கள் உள்ளன. இவை அவ்வப்போது வேட்டையாடப்பட்டு வருகின்றன. இந்த மாதத்தில் மட்டும், இதுவரை ஐந்து காண்டா மிருகங்கள் கொல்லப்பட்டு, அவற்றின் கொம்புகள் திருடப்பட்டுள்ளன.இதனால், வனக்காவலர்கள், இரவு நேரங்களில், பூங்காவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழக்கப்பட்ட யானைகளும், அவர்களுடன் செல்வது வழக்கம். நேற்று முன் தினம் இரவு, தேசிய பூங்காவுக்கு உட்பட்ட, புராபஹார் வனத்தில், பழக்கப்பட்ட யானைகளும், அவற்றின் பாகன்களும், வனக்காவலர்களுடன் கண்காணிப்பு பணிக்குச் சென்றனர்.கண்காணிப்பு பணி முடிந்து திரும்பும் போது, பாபுல் என்ற யானை, திடீரென கோபமுற்று, தன் பாகனை, தும்பிக்கையால் தூக்கி வீசியதோடு, மிதித்தும் கொன்றது.இத்தகவலை மாவட்ட வனத்துறை அதிகாரி கோகாய் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.