குருவாயூர்: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், துலாபார வேண்டுதலை நிறைவேற்றினார், பிரபல திரைப்பட பின்னணி பாடகி, எஸ்.ஜானகி.கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது குருவாயூர் கிருஷ்ணன் கோவில். நேற்று முன்தினம் மாலை, இங்கு வந்த, திரைப்பட பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, மூலவரை தரிசித்த பின், எடைக்கு எடை வெல்லம் கொடுத்து, துலாபார வேண்டுதலை நிறைவேற்றினார். அவரின் எடைக்கு, 75 கிலோ வெல்லம் தேவைப்பட்டது. அதற்கான பணம், 1,500 ரூபாயை, தேவஸ்தான அலுவலகத்தில் செலுத்தினார்.கேரளா, பாலக்காடு மாவட்டம், ஒட்டப்பாலத்தில் வசிக்கும், நண்பரின் இல்லத் திருமணத்தில் பங்கேற்பதற்காக, ஜானகி சென்றிருந்தபோது தான், அவர் மத்திய அரசின், "பத்ம பூஷன்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியானது."காலம் தாழ்த்தி வழங்கப்பட்டுள்ள விருதை வாங்கப் போவதில்லை' என, அறிவித்த ஜானகி, அதன்பின், குருவாயூருக்கு சாமி தரிசனத்திற்காக வந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.