புதுடில்லி: சோமாலியா கடற் கொள்ளையர்களால், 10 மாதங்களாக, சிறை பிடிக்கப்பட்டுள்ள, இந்தியாவைச் சேர்ந்த, கப்பல் ஊழியர்கள், 17 பேரை விடுவிக்க, நைஜீரியா அரசின் உதவியை, மத்திய அரசு நாடியுள்ளது.நைஜீரியா நாட்டுக்கு சொந்தமான, "எம்.டி-ராயல் கிரேஸ்' என்ற கப்பலில், இந்தியாவைச் சேர்ந்த, 17 பேர், பணியாற்றி வந்தனர். கடந்த, 10 மாதங்களுக்கு முன், இந்த கப்பல், ஆப்பிரிக்காவில் உள்ள, சோமாலியா கடற் பகுதியில் சென்றபோது, அந்த கப்பல் மீது, கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.கப்பலில் இருந்த, இந்தியர்கள், 17 பேரையும், சிறைப்பிடித்து சென்றனர். இவர்களை விடுவிப்பதற்கு, கணிசமான அளவு பணம் கேட்கின்றனர். சோமாலியா, ஆப்பரிக்காவில், நீண்ட கடற்கரை பரப்பை உடைய நாடு.இந்த வழியாக செல்லும், சரக்கு கப்பல்களை கொள்ளையடிப்பதற்கென, சோமாலியாவில், பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. இவர்களால், சர்வதேச கப்பல் வர்த்தகம், கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.இந்நிலையில், சோமாலிய கடற் கொள்ளையர்களால், சிறை பிடிக்கப்பட்ட, இந்தியர்களை மீட்க வலியுறுத்தி, கேரளாவைச் சேர்ந்தவரும், மார்க்சிஸ்ட் கட்சியின், ராஜ்யசபா எம்.பி.,யுமான, கே.என்.பாலகோபால், பிரதமரிடம், மனு அளித்திருந்தார். இதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பதில்:கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய கப்பல், நைஜீரியாவுக்கு சொந்தமானது. ஊழியர்களை மீட்பது குறித்து பேச்சு நடத்துவதற்கு, சம்பந்தபட்ட கப்பல் உரிமையாளர் முன் வரவேண்டும். இதற்காக, நைஜீரிய அரசுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. "கடற் கொள்ளையர்களுடன் பேச்சு நடத்தும்படி, கப்பல் உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும்' என, நைஜீரிய அதிகாரிகளிடம், அங்குள்ள இந்திய தூதரகம் மூலம், வலியுறுத்தப்பட்டுள்ளது.கடற் கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்தியர்களை, விரைவில் மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவி வழங்கப்படும்.இவ்வாறு, பிரதமர் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.