Advertisement
பா.ஜ., - எம். எல்.ஏ.,க்கள் 13 பேர் ராஜினாமா ஏற்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
23:26

பெங்களூரு: கர்நாடகாவில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கட்சியில் சேருவதற்காக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், 13 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்; அவர்களின் ராஜினாமா கடிதங்களை, சபாநாயகர் போப்பையா நேற்று ஏற்றுக் கொண்டார்.கர்நாடகாவில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இந்த அரசில் இடம் பெற்றிருந்த, இரண்டு அமைச்சர்கள் உட்பட, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், 13 பேர், சமீபத்தில், தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் எல்லாம், பா.ஜ., முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சி தலைவருமான எடியூரப்பாவின் ஆதரவாளர்கள்.எடியூரப்பாவின் கட்சியில் சேர முடிவு செய்தே, இவர்கள் ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதம் கொடுப்பதற்காக, கடந்த, 23ம் தேதி சபாநாயகர் அலுவலகம் சென்றனர். சபாநாயகர் இல்லாததால், கவர்னர் பரத்வாஜிடம் அளித்தனர்.வெளிநாடு சென்றிருந்த சபாநாயகர், பெங்களூரு திரும்பியதை அடுத்து, "ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.,க்கள், நண்பகல், 12:00 மணிக்கு தன்னிடம் கடிதம் தரலாம்' என, நேற்று தெரிவித்தார்.இதற்கிடையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, முன்னாள் அமைச்சர் உதாசியின் வீட்டில், எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் கூடி ஆலோசித்தனர். இந்த ஆலோசனையில், கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த, 13 எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர்.இதன்பின், நண்பகல், 12:00 மணிக்கு, விதான் சவுதாவில் உள்ள சபாநாயகர் அலுவலகம் சென்ற, 13 எம்.எல்.ஏ.,க்களும், சபாநாயகர் போப்பையாவிடம் தங்களின் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர்.அவர்களின், ராஜினாமா கடிதங்களை பெற்றுக் கொண்ட சபாநாயகர், ""உங்கள் மீது புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும். லோக்சபா சபாநாயகர் மீராகுமாரிடம் கருத்து கேட்டு, அதன்படி முடிவெடுக்கப்படும். இதற்கு எனக்கு, 15 நாள் கால அவகாம் வேண்டும்,'' என்றார்.ராஜினாமா செய்த, 13 பேரில், சித்ரதுர்கா மாவட்டம் செல்லகரே தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., திப்பேசாமி ராஜினாமா மட்டும் ஏற்கப்பட்டதாக, நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில், சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது. அதன்பின், மற்ற, 12 பேரின் ராஜினாமாக்களும் ஏற்கப்பட்டதாக, இரவில், சபாநாயகர் அலுவலகம் கூறியது. இதற்கிடையில், கர்நாடக சட்டமேலவை எம்.எல்.சி.,க்கள், ஐந்து பேரை, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் இருவர், சட்ட மேலவை தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.