Advertisement
விரைவு கோர்ட்டுகள் : மத்திய அரசு அதீத வேகம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
23:30

புதுடில்லி: டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து, இது போன்ற கொடூரம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் விரைவு கோர்ட்டுகளை அமைப்பதில், மத்திய சட்ட அமைச்சகம் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.விரைவு கோர்ட்டுகளுக்கு ஆகும் செலவை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, மத்திய அரசு - மாநில அரசுகள் இடையே, கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், கருத்து வேறுபாடு நிலவியது. ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. பெரும்பாலான தொகையை ஏற்க தயாராக இருப்பதாக, மத்திய அரசு இறங்கி வந்துள்ளது.அந்த அளவுக்கு, டில்லி சம்பவம் சட்ட அமைச்சகத்தை மாற்றியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் வகையில், விரைவு கோர்ட்டுகளை, உடனடியாக அமைக்கும்படி, மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், மாநில முதல்வர்கள் மற்றும், 21 மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஸ்வினி குமார் கூறியதாவது:விரைவு கோர்ட்டுகளை அமைக்கும்படி, மாநில அரசுகளை நாங்கள் ஆதரித்து வருகிறோம். அனைத்து மாநில முதல்வர்களும், ஐகோர்ட் தலைமை நீதிபதிகளும், இந்த விஷயத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.விரைவு கோர்ட் அமைப்பதற்கான நடவடிக்கைகள், அனைத்து மாநிலத்திலும் துவங்கி நடந்து வருகின்றன. பஞ்சாப், டில்லி, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், ஏற்கனவே விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த விரைவு கோர்ட்டுகள், கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற கொடூர குற்றங்களை மட்டும் விசாரிக்காமல், வயதானவர்கள் பாதிக்கப்பட்ட வழக்குகள், மண விவகாரம், காவல் தொடர்பான பிரச்னை ஆகியவற்றையும் விரைவாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அஸ்வினி குமார் கூறினார்.கடந்த, 2005ம் ஆண்டு வரை நாடு முழுவதும், 1,500 விரைவு கோர்ட்டுகள் செயல்பட்டு வந்தன. இதற்கு பின், விரைவு கோர்ட்டுகளுக்கு ஆகும் செலவை பகிர்ந்து கொள்வதில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இடையே பிரச்னை எழுந்தது. 50 சதவீத செலவை ஏற்பது மாநில அரசுகளுக்கு பெரும் சுமையாக இருந்தது. அதனால், விரைவு கோர்ட்டுகள் மூடுவிழா கண்டன.ஆனால், டில்லி சம்பவம் மத்திய அரசு மட்டுமல்லாது, மாநில அரசுகளின் கண்கணை திறந்துள்ளது. 50 சதவீதத்திற்கு மேல் பிடிவாதம் காட்டிய மத்திய அரசு, பெரும்பான்மையான செலவை அதாவது, 75 சதவீதம் வரை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில், 90 சதவீதம் வரை கூட ஏற்பதாக கூறியுள்ளது. விரைவு கோர்ட்டுகள் அமைப்பதற்கு உதவவும், நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கடந்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.