புதுடில்லி: ரயில் இன்ஜின்களில், முதன் முறையாக கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.ரயில்களை இயக்கும் ஓட்டுனர்கள், அடிப்படை தேவையான கழிப்பறை வசதி இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டனர். அவர்கள் இயற்கை உபாதைகளுக்காக, ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும் போது மட்டுமே சமாளிக்க முடிந்தது.இதற்காக, ரயில் இன்ஜின்களில், கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என, நீண்ட நாட்களாக கோரி வந்தனர். இந்தியாவில் இயக்கப்படும் டீசல் இன்ஜின்களில், இது நாள் வரை, கழிப்பறை வசதி செய்யப்பட்டது இல்லை. இந்நிலையில், முதன் முறையாக, ரயில் இன்ஜினில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.கழிப்பறை மற்றும் வாஷ் பேசின் பொருத்தப்பட்டிருந்த, முதலாவது ரயில் இன்ஜின் நேற்று, டில்லி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை, மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் நேரில் ஆய்வு செய்தார்.பின், நிருபர்களிடம் பேசிய அவர், ""கழிப்பறை வசதி, சோதனை முயற்சியாக பரிசோதித்து பார்க்கப்பட்டு உள்ளது. இதே போன்று, அனைத்து தொலை தூர ரயில்களிலும், விரைவில் அமைக்கப்படும். இது போன்ற கழிப்பறைகள், ராஜ்தானி ரயில்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.