குண்டு துளைக்கப்பட்ட சடலங்கள் சிரியா நாட்டு ஆற்றில் கண்டெடுப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

டமாஸ்கஸ்: சிரியா நாட்டின், ஆற்றில் குண்டு துளைக்கப்பட்ட நிலையில், ஏராளமான சடலங்கள் மிதக்கின்றன.சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, எதிர்கட்சியினர், 22 மாதங்களாக போராடி வருகின்றனர். ஆசாத் பதவி விலகாத காரணத்தால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா, ஆயுத உதவி அளித்து வருகிறது. இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது.சிரியாவில், எல்லை புற நகரங்களை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். முக்கிய நகரங்களில், இரவு பகலாக சண்டை நடப்பதால், அத்தியாவசிய பொருட்களின் சப்ளை, நிறுத்தப்பட்டு விட்டது.பல மாதங்களாக நீடிக்கும் சண்டையில், 60 ஆயிரம் பேர் கொல்லப் பட்டுள்ளனர். ஐந்து லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.தொடர் சண்டை காரணமாக, தலைநகர் டமாஸ்கசில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.இதற்கிடையே, அலெப்போ நகரில் உள்ள கியூவீக் நதியில், குண்டுகளால் துளைக்கப்பட்ட ஏராளமான சடலங்கள் மிதந்து வருகின்றன. நேற்று, 68 சடலங்கள் மீட்கப்பட்டன. இன்னும் பல சடலங்கள் மிதந்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளன.அரசு ஆதரவாளர்களை கடத்தி சென்ற கிளர்ச்சியாளர்கள் தான் இவர்கள் சுட்டு கொன்றதாக, அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ராணுவத்தினர் தான் இவர்கள் கொடூரமாக சுட்டு கொன்று ஆற்றில் வீசியுள்ளதாக, கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணியில், தொண்டு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdus sami - chennai  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201300:03:48 IST Report Abuse
Abdus sami இசுலாமிய நாடுகளை அழிக்க எவ்வளவு தி்ட்டம் போட்டாலும் இசுலாமிய மார்க்கம் மேலோங்ஙுவதி்ல் எந்தவித சந்தேகமும் இல்லை இன்சா அல்லா
Rate this:
Share this comment
Cancel
BUHARI - dubai  ( Posted via: Dinamalar Android App )
30-ஜன-201320:53:08 IST Report Abuse
BUHARI அமெரிக்கா கண்டிப்பாக தீர்ப்பு நாளில் இறைவனிடம் பதி்ல் சொல்லிரே தீர வேண்டும் இறைவா இந்த கொடியவர்களுக்கு இந்த உலகத்தி்லேயே சரியான பாடம் கற்பிப்பாயாக
Rate this:
Share this comment
Cancel
Jay Chandra Devasigamoni - TAMILNADU,இந்தியா
30-ஜன-201310:55:56 IST Report Abuse
Jay Chandra Devasigamoni தணிக்கை
Rate this:
Share this comment
Cancel
Jay Chandra Devasigamoni - TAMILNADU,இந்தியா
30-ஜன-201310:55:17 IST Report Abuse
Jay Chandra Devasigamoni எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில்
Rate this:
Share this comment
Cancel
Ungal thamilan - chennai,இந்தியா
30-ஜன-201310:31:18 IST Report Abuse
Ungal thamilan அரபு நாடுகள் அனைத்தையும் அழித்து கொண்டுயிருக்கும் அமெரிக்க, இஸ்ரேல ,இங்கிலாந்த் ,பிரான்ஸ் , ஆகிய மத வெறி உள்ள நாடுகள் இறைவனிடம் ஒருநாள் பதில் சொல்லி ஆஹ வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்