What happened in Kargil war? Breaks with former Pak., Officer | கார்கில் போரில் நடந்தது என்ன? போட்டு உடைக்கிறார் மாஜி பாக்., அதிகாரி | Dinamalar
Advertisement
கார்கில் போரில் நடந்தது என்ன? போட்டு உடைக்கிறார் மாஜி பாக்., அதிகாரி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

இஸ்லாமாபாத்: ""எந்தவொரு நோக்கமும் இல்லாமல், திட்டமிடுதல் இல்லாமல், நான்கு பேரை பிரதானப்படுத்தியதுதான், கார்கில் போரில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணம்,'' என, மாஜி ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யில், பகுப்பாய்வு பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர், சாகித் அஜிஸ். சமீபத்தில், பத்திரிகைக்கு பேட்டி அளித்த இவர், கார்கில் விவகாரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து தெரிவித்திருந்தார்.பேட்டியில் அஜிஸ் கூறியதாவது:காஷ்மீரில், 1999ல், கார்கில் பகுதியை கைப்பற்றுவதில் அப்போதைய தளபதியாக இருந்த, முஷாரப் தீவிரமாக இருந்தார். இதனை ரகசியமாகவே நிறைவேற்ற, மாஜி அதிபர், முஷாரப் எண்ணினார். இதனால், இந்த விவகாரம் குறித்து, தளபதிகள் முகமது அஜிஸ், ஜாவித் ஹசன் மற்றும் முகமது அகமது ஆகியோருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதே நேரத்தில், ராணுவத்தினரில் சிலர் மட்டுமே இதில் தீவிரம் காட்டினர். நான்கு பேர்இது, முழுக்க முழுக்க இந்த நான்கு பேரை முன்னிலைப்படுத்தி மட்டுமே நடைபெற்றதுதான் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தோல்விக்கு முக்கிய காரணம். அதே நேரத்தில், இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என, கூறி வந்த அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப், ஒரு கட்டத்தில், ராணுவ தளபதியுடன் பேசியபோது, "காஷ்மீரை எப்போது மீட்டு கொண்டு வரப்போகிறீர்கள்?' என, கேட்டார்.இருப்பினும், கார்கிலைக் கைப்பற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் ராணுவத்தின் திட்டம் நிறைவேறவில்லை. எத்தனை பேர்இதில், இந்திய ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விவரங்கள் முழுமையாக இதுநாள் வரை தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, பாகிஸ்தான் நாட்டு மக்களிடம், கார்கிலைக் கைப்பற்றும் விருப்பத்தை மறைத்திருக்க கூடாது.சரியான திட்டமிடுதல் மற்றும் நோக்கம் ஆகியவற்றில் தெளிவில்லாத நிலை போன்றவையும் தோல்விக்கு முக்கிய காரணம். பெரும்பாலான ராணுவத்தினர், முதன்மை பணியாளர்கள் மற்றும் ராணுவ செயலாக்கத்தின் இயக்குனர் ஜெனரல் தாகிர் ஜியா ஆகியோருக்கும், கார்கில் விவகாரம் குறித்து, போர் துவங்கிய பின்னரே தெரியவந்தது. இவ்வாறு அஜிஸ் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
buhari - DUBAI DUBAI DUBAI  ( Posted via: Dinamalar Android App )
30-ஜன-201320:48:04 IST Report Abuse
buhari இருக்குர உன்னாட்டையே ஓழுங்கா காப்பாத்த முடியல. கேடுகெட்ட அமெரிக்க குள்ள நரிகிட்ட தாரவாத்து கொடுத்து எங்கள் தாய் தி்ருநாட்டிற்கு எதி்ராக செயல் பட்டு கொண்டிருக்கின்றாய்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Jay Chandra Devasigamoni - TAMILNADU,இந்தியா
30-ஜன-201310:44:26 IST Report Abuse
Jay Chandra Devasigamoni நல்லது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
30-ஜன-201306:59:35 IST Report Abuse
Guru செய்த ஐயோக்கியதனத்தை எவ்ளோ தெய்ரியமா சொல்லூராங்கப்பா
Rate this:
0 members
0 members
29 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்