ஹனோய்: வியட்னாமில், அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்த, 22 பேர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.வியட்நாமில், கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக, 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, 22 பேர் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதையொட்டி, நேற்று விசாரணை துவங்கியது. இந்த விசாரணை, ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது. இருப்பினும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நபர்களின் பெயரை வெளியிட அரசு தரப்பில் மறுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், 14 பேருக்கு, 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.