மெல்போர்ன்: ஆசிய நாட்டு டாக்டர்கள் குறித்து, தவறான நோக்கில் கருத்து தெரிவித்ததற்காக, ஆஸ்திரேலிய பிரதமரின் காதலர் வருத்தம் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டு, 49; இவருடைய காதலர் மேத்திசன்,56. கேன்பெர்ரா நகரில் உள்ள பிரதமர் இல்லத்தில், மேற்கிந்திய கிரிக்கெட் அணியினர், இவரை சந்தித்தனர். சிறுநீரகத்திற்கு அருகே உள்ள, பிராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பது குறித்து விவாதம் நடந்தது.இது குறித்து பிரதமரின் காதலர் மேத்திசன் கூறுகையில், ""புராஸ்டேட் புற்றுநோய் வராமல் இருக்க, அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டிஜிட்டல் முறையில் ரத்த பரிசோதனை செய்வதன் மூலம் துல்லியமான பலன் கிடைக்கும். தேவைப்பட்டால், ஆசியாவை சேர்ந்த இளம் பெண் டாக்டரை சந்திப்பது நல்லது,'' என்றார்.பிரதமர் ஜூலியா எதிரிலேயே, மேத்திசன் இதுபோன்ற ஆபாசமான கருத்தை தெரிவித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.