வாஷிங்டன்: தீபாவளி தொடர்பான தபால் தலையை வெளியிடும்படி, அமெரிக்க எம்.பி.,க்கள் கோரியுள்ளனர்.இந்திய வம்சாவளியை சேர்ந்த, அமி பெரா உள்ளிட்ட, மூன்று அமெரிக்க எம்.பி.,க்கள், "அமெரிக்க அஞ்சல் துறை, தீபாவளி தொடர்பான தபால் தலையை வெளியிட வேண்டும்' என்ற தீர்மானத்தை அந்நாட்டு பார்லிமென்டில் கொண்டு வந்துள்ளனர்.ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கான தபால்தலை, அமெரிக்காவில் ஏற்கனவே, வெளியிடப்பட்டுள்ளது. "இந்தியாவின் முக்கியமான பண்டிகையான தீபாவளியை கவுரவிக்கும் வகையில் தபால்தலை அறிமுகப்படுத்த வேண்டும்' என, இவர்கள் கோரியுள்ளனர்.அமெரிக்காவில், தீபாவளியையொட்டி, இந்தியர்களுக்கு மட்டும், விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.