துபாய்: உரிய ஆவணங்கள் இல்லாததால், தாயகம் திரும்ப சிரமப்பட்ட, இந்தியர், சான்றிதழ் கிடைத்ததும், ஓமன் நாட்டிலேயே இறந்து விட்டார்.கேரளாவை சேர்ந்தவர் மதுசூதன், 56. இவர், 1977ம் ஆண்டு, மஸ்கட்டுக்கு, கட்டட வேலை செய்வதற்காக வந்தார். வந்த இடத்தில், பாஸ்போர்ட் மற்றும் முக்கிய ஆவணங்களை தொலைத்து விட்டார். இதன் காரணமாக, உரிய வேலைக்கிடைக்காமல், துப்புரவு வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, தாயகம் திரும்ப முயற்சி மேற்கொண்டார். ஆனால், எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான, ஆதாரங்களை இவரால் சமர்பிக்க இயலவில்லை. இதனால், பல ஆண்டுகளாக, தாயகம் திரும்ப முடியாமல் திண்டாடினார்.அங்குள்ள தொண்டு நிறுவனத்தினர் உதவியால், சமீபத்தில் இவருக்கு, நாட்டை விட்டு வெளியேறுவதற்குரிய "பாஸ்' கிடைத்தது. இதையடுத்து, கேரளா திரும்ப திட்டமிட்டிருந்தார்.மொட்டை மாடியில் தங்கியிருந்ததால், கடும் பனியில், மதுசூதன் உடல்நலம் பாதிக்கப்பட்டது. காசநோய் மற்றும் இதய நோயால் ஏற்கனவே, பாதிக்கப்பட்ட மதுசூதன், தாயகம் திரும்பாமல், மஸ்கட்டிலேயே இறந்து விட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.