சான்டியாகோ: மூளை குறைபாடுள்ள மகனை, தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய்க்கு, அமெரிக்காவில், 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ நகரை சேர்ந்தவர் பேட்ரிசியா,37. ஆட்டிசத்தால் (மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு,பேச்சு மூலமாக தன்னை சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாமல் செய்யும் குறைபாடு)பாதிக்கப்பட்ட, நான்கு வயது மகனை குளியல் தொட்டியில் உள்ள, நீரில் மூழ்கடித்து கொன்றார். பின், அவனது உடலை போர்வையில் சுற்றி, காரின் பின் சீட்டில் எடுத்து சென்று, போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.மகனை கொன்ற வழக்கில், பேட்ரிசியாவுக்கு, 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.