E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மீண்டும் சிக்கலில் "தயா சைபர் பார்க்' : "சர்வே' நடத்திய மாநகராட்சி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
23:44

மதுரை: மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான, "மதுரை தயா சைபர் பார்க்' மீதான நில ஆக்கிரமிப்பு புகாரில், நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று, அங்கு ஆய்வு நடத்தினர்.

மதுரை மாட்டுத் தாவணி அருகே, "தயா சைபர் பார்க்' உள்ளது. கட்டடம் அமைந்துள்ள, 1.20 ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு, அழகிரி பெயரில் பட்டா உள்ளது. அன்றைய கலெக்டர் சகாயம் உத்தரவுப்படி, அளவீடு செய்ததில், ஆக்கிரமிப்பு இருப்பதும், உரிமம் பெறாததும் கண்டுபிடிக்கப்பட்டது; அதன்படி, தயா சைபர் பார்க் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க, சகாயம் உத்தரவிட்டார். விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய பின், வரைபட உரிமம் கேட்டு, தயா பார்க் நிர்வாகம், காசோலை அனுப்பியது; மாநகராட்சி, அதை ஏற்கவில்லை.அது தொடர்பான பரிசீலனை நடந்த நிலையில், 2012, ஏப்., 25 ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், "மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்த அழகிரி மீது, நில அபகரிப்பு புகார் செய்ய வேண்டும்' என, கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

மறுநாள், அழகிரி தரப்பில் நிருபர்களை சந்தித்த மாஜி துணை மேயர் மன்னன், "2006 ல் அழகிரி அனுப்பிய மனுவின் படி, விவேகானந்தர், 120 அடி ரோட்டில் உள்ள பகுதியில், பூங்கா அமைத்து பராமரிக்க, அன்றைய கமிஷனர் தினகரன் அனுமதி வழங்கினார். மாநகராட்சி அனுமதியின்படி, நிலத்தை பாராமரித்து வருகின்றனர்' என, அதற்கான ஆணையை காண்பித்தார்.

அதை மறுத்த மாநகராட்சி நிர்வாகம், அழகிரி தரப்பு வெளியிட்ட ஆணை குறித்து விசாரிக்க, தனிக்குழுவை நியமித்தது. "மன்ற ஒப்புதல் இல்லாமல், ஆணை பதிவு செய்யப்பட்டுள்ளது' என, அக்குழு தெரிவித்தது; அதன் பின், இரு தரப்பும் அமைதியாகின. இந்நிலையில், மாநகராட்சி சர்வேயர் மலைச்சாமி தலைமையிலான அதிகாரிகள், தயா சைபர் பார்க் கட்டடத்தில், நேற்று, மறு அளவீடு செய்தனர். நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, அளவைப் பணி நடப்பதாக, பணியிலிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேயர் ராஜன் செல்லப்பா கூறுகையில், ""மீண்டும் அளவைப் பணி நடந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, கமிஷனர் நந்தகோபால் ஆலோசித்து வருகிறார்,'' என்றார்.

Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thirumalai chari - chennai,இந்தியா
30-ஜன-201308:59:35 IST Report Abuse
thirumalai chari இதே சர்வேயர் இன்று ஒரு மாதிரி அளப்பான், அன்று இவனே ஒரு மாதிரி அளந்திருப்பான். அரசியல் வாதி நிலம் எப்படியாவது அளந்து விட்டு போகட்டும், மக்கள் கவலைப்படபோவதில்லை. இன்று நிகழ்கால உண்மை என்ன வென்றால், உள்கட்டமைப்பு பேரில், சமூக விரோதி, அரசு அலுவலர், ஒப்பந்தக்காரர் கூட்டு சேர்ந்து, பொது மக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த சுர்வேயர்கள் செயல் படுவது மக்களின் பொறுமையை சோதிக்கிறது, அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. பல கோடியில் திட்டம் போடுவது பெருசல்ல, அதை நிறைவேற்றும் பொது மக்களின் பேராதரவுடனும், அவர்கள் பாதிக்காத வகையில் செய்வதே சால சிறந்தது. கடன் வாங்கி உள்கட்டமைப்பை நிறைவேற்றும் முயற்சி தமிழகத்திற்கு தேவை இல்லை. இந்த சமயத்தில் இது போல் கடன் வாங்கி செய்யும் உள்கட்டமைப்பு ஒரு சிலரின் பையை நிரப்பலாமே தவிர பொது மக்களுக்கு பயன் அளிக்கப்போவத்தில்லை என்பது திண்ணம்.
Rate this:
0 members
0 members
7 members
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
30-ஜன-201307:42:50 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் எந்த உத்தமனும் இல்லை என்று சொல்ல முடியாது ... திமுக ஆட்சியில் ஊழல் நடக்க வில்லை என்றும் , இது போன்ற சைபர் பார்க் பெருத்த பணத்தை லஞ்சமாக கொடுத்ததும் வாங்கியும் தான் இதை கட்டியுள்ளனர் என்று ..// இது அழகிரிக்கு அதிமுக சார்பில் வைக்க பட்டுள்ள அடுத்த செக் ...
Rate this:
1 members
0 members
20 members
Cancel
Arp Peter - sivagangai ,இந்தியா
30-ஜன-201307:18:58 IST Report Abuse
Arp Peter எங்ககிட்டே மோதுனாலோ,பிரட்சன பண்ணிலலோ யாரா இருந்தாலும் அவனுகள சைபராக்கிருவோம் மதுரையிலேவா???
Rate this:
3 members
0 members
8 members
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
30-ஜன-201306:50:55 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் பெட்டி வாங்கலையோ, பெட்டி......பெட்டி, கனமான பெட்டி வாங்க, விற்க சிறந்த நிறுவனம்...........
Rate this:
0 members
0 members
9 members
Cancel
Nandu - Chennai,இந்தியா
30-ஜன-201306:34:00 IST Report Abuse
Nandu ஒரு நாள் உணவாவது உழைத்து சாபிடுங்கலேன். ஒரே உடுப்பாவது உழைத்த பணத்தில் வாங்கி போட்டுக் கொள்ளுங்களேன்.
Rate this:
1 members
0 members
20 members
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
30-ஜன-201305:17:36 IST Report Abuse
G.Prabakaran இந்த சைபர் பார்க் வழக்கு ஏன் கிடப்பில் போடப்பட்டது. Granite ஊழல் வந்ததும் இதை விட்டு விட்டார்கள். இவர்கள் குடும்ப ஊழல் வழக்குகளுக்காகவே தனியாக நீதி மன்றம், காவல் நிலையம், எல்லாம் அமைக்க வேண்டுமோ?
Rate this:
1 members
1 members
16 members
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
30-ஜன-201305:04:52 IST Report Abuse
Baskaran Kasimani ஆய்வா அல்லது ஆராய்ச்சியா அல்லது பெட்டிதான் வாங்க அச்சாரமா?
Rate this:
0 members
0 members
9 members
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
30-ஜன-201304:39:28 IST Report Abuse
K.Sugavanam கிரானைட் வழக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மாதிரி ஆரம்பிச்சு,சதாப்தி ஆகி,மெயில் ஆயி இப்போ பாசென்ஜர் கணக்கா போகுதே நீராவி எஞ்சின் மாதிரி மியூசியம் பீஸ் ஆகாம பாத்துக்கோங்க..
Rate this:
1 members
0 members
13 members
Cancel
Annamalai - Oxford,யுனைடெட் கிங்டம்
30-ஜன-201301:33:53 IST Report Abuse
Annamalai ஆட்சியில் இருக்கும் போது ஆரம்பிக்க படும் தொழில்கள் யாவும் "கறுப்பை" மாற்றி "வெள்ளையாக" ஆக்கி கொள்வதற்கே. ஆக்கிரமிப்பு அகற்றினாலும் அல்லது அகற்றபடாவிட்டலும் நோக்கம் செம்மையாக நடந்து கொண்டே இருக்கும்.
Rate this:
1 members
0 members
11 members
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
30-ஜன-201301:14:38 IST Report Abuse
குடியானவன்-Ryot உங்கள் புண்ணியத்தால் எம் விவசாயிகள் கண்ட பலன்கள்: 2011யில் urea 50 kg மூட்டை 300 ரூபாய், 2012யில் 500 ரூபாய். 2011யில் DAP 50 kg மூட்டை 700 ரூபாய், 2012யில் 1200 ரூபாய். 2011யில் complex 50 kg மூட்டை 400, 2012யில் 800 ரூபாய். போதும் நீங்கள் அமைச்சராகி எங்களை வாழவைத்தது. தயவு செய்து ஓட்டு கேட்டு எங்கள் பகுதிக்கு வந்துவிடாதீர்கள் எம் மக்கள் உங்களின் சட்டையை பிடித்து கேள்விகேட்க தயாராக உள்ளார்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை இருந்தாலும் சாபம் விடுகிறேன் கனிம ஊழல், உர ஊழல், நிலம் அபகரிப்பு போன்று பல வழக்குகளில் சிக்கி திரு. வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் கதி தான் உங்களுக்கு வரும்...
Rate this:
0 members
0 members
41 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.