மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில், சர்வாதிகாரி மார்கோசின் ஆட்சியில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க, தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டின் மாஜி சர்வாதிகாரி மார்கோஸ், இவரது மனைவி இமல்டா. இவர்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து சொத்து சேர்த்தனர். மார்கோசின் ஆட்சியில், ஏராளமானோர் பல்வேறு வகையிலும் துன்புறுத்தப்பட்டனர்.தனக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக, கம்யூனிஸ்ட் பத்திரிகை ஆசிரியர் போனிபாசியோ கைது செய்யப்பட்டு, கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவரது சகோதரி காணாமல் போய்விட்டார். தனக்கு எதிராக செயல்படுபவர்களை சிறையில் அடைப்பது, துன்புறுத்துவது,கொலை செய்வது போன்றவற்றை மார்க்கோஸ் தொடர்ந்து செய்து வந்தார். கடந்த, 1986ல் பிலிப்பைன்சில், மார்கோசின் ஊழல் ஆட்சி கொடிகட்டிப் பறந்தது. பின், அக்கீனோ பதவிக்கு வந்த பின், மார்கோசும், இமல்டாவும், ஹவாய் தீவிற்கு தப்பிவிட்டனர்.இந்நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பின், மார்கோசின் ஆட்சியில் துன்பம் அனுபவித்த மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க, பிலிப்பைன்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, 2500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க, பிலிப்பைன்ஸ் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.