மும்பை:"தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுஷ்மா சுவராஜ் பொருத்தமானவர்' என, சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது.
"பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும்' என, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா குரல் கொடுத்திருந்தார். இதற்கு, கூட்டணி கட்சியான, ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.,வின் மற்றொரு கூட்டணி கட்சியான, சிவசேனா, "லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சுஷ்மா சுவராஜை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' எனக்கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனாவின் செய்தி தொடர்பாளரும், எம்.பி.,யுமான, சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "" பிரதமர் வேட்பாளருக்கு, சுஷ்மா சுவராஜ் பொருத்தமானவர். பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளராக சுஷ்மா சுவராஜ் இருக்க வேண்டும் என, மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே கருத்து தெரிவித்து இருந்தார்,'' என்றார்.
குஜராத், ராஜ்கோட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுவதற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அனுமதி அளித்ததற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சின்காவை தொடர்ந்து, மற்றொரு பா.ஜ., மூத்த தலைவர், ராம்ஜெத்மலானி மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
டில்லியில், நிருபர்களிடம் பேசிய ராம்ஜெத்மலானி கூறுகையில்,"" மோடி, 100 சதவீதம் மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவர்; பிரதமர் பதவிக்கு சிறந்த வேட்பாளராக அவர் இருப்பார். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க வேண்டும் என, ஒரு மாதத்திற்கு முன், தெரிவித்து விட்டேன். என் கருத்துக்கு ஆதரவாக, சின்கா பேசியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் தேர்தலை சந்திப்பதே சிறந்தது...தேர்தலுக்கு பின்னர் , கிடைக்கும் சீட்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து பிறகு தலைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்....இந்த முறையை அனைத்து கட்சிகளுமே பின் பற்றலாம்... ராம்ஜெத்மலானி மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஓகே...கட்கரியை தலைவர் போட்டியிலிருந்து ஓரம் கட்டிய யஷ்வந்த் , மோடியை ஆதரித்திருப்பதும் ஓகே...ஆக RSS ஒரு புறமும்,சிவசேனா ,ஒரு புறமுமாக .BJP யை ஆட்டி வைத்து கொண்டிருக்கின்றன...முடிவு ஒரு வேளை குடியரசு தலைவர் தேர்தலில் பிஜேபியின் நிலை போலாகிவிடுமோ?பார்ப்போம்...நல்லா பொழுது போகும்....
Modi has more and more problems to face..The chances for him to be announcing him as PM Candidate is very very less..Media is creating an impacting on modi..As far as myself, the chances for Sushma swaraj is 100 percent...In Congress, ragul has been lifted to the high post and will favoured as PM candidate..if suppose congress wins,the situation will change..P.chidambaram or Antony may become PM..
as sonia is afraid remembering her husband and indira gandhi..
நிதிசுக்கு மோடி வேண்டாம், சிவசேனாவுக்கு சுஷ்மா வேண்டும், அகாலி தள் இன்னும் வாயை திறக்கவில்லை. பாதலுக்கு துணை பிரதமர் பதவி கொடுத்தால் யாரையும் ஆதரிக்க தயாராக இருப்பதாக அவர்கள் அறிவிக்கலாம். மோடியை பிரதமராகவும் ஜெயாவை துணை பிரதமராகவும் திட்டமிட்டு வைத்திருப்பவர்களுக்கு....இந்த திட்டம் சரிப்பட்டு வராது. ஆக மொத்தம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலை போல இதுவும் ஆகப் போகிறதோ என்னமோ......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.