புதுடில்லி:"காவிரியில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி, கர்நாடகா அரசுக்கு, இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது' என, தெரிவித்த சுப்ரீம் கோர்ட், வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம், 4ம், தேதிக்கு ஒத்திவைத்தது.
"தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில், தண்ணீரின்றி கருகும், சம்பா பயிர்களை காக்க, 12 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்' என, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதிகள், ஆர்.எம்.லோதா, ஜெ.செலமேஸ்வர் ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தவு:கடந்த, 1992லிருந்து, 2012 வரை, குடிநீருக்காக பயன்படுத்திய, காவிரி தண்ணீரின் அளவு குறித்த விபரங்களை, கோர்ட்டில், கர்நாடக அரசு தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் தமிழகத்துடன் பகிர்ந்து கொண்ட, காவிரி தண்ணீர் குறித்த விபரங்களை தர வேண்டும்.பழமையான அணுகுமுறை மற்றும் நடைமுறைகளுக்கு பதிலாக, இரு மாநிலங்களின் தேவையை, சமமாக பூர்த்தி செய்யும் வகையில், ஒரு புதிய முறையை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். தண்ணீரை சரிசமமாக பகிர்ந்து கொள்ள, ஒரு இடைக்கால தீர்வு காண வேண்டியது அவசியம்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகா தரப்பில் ஆஜரான வக்கீல், வாதிட்டதாவது:தற்போதுள்ள சூழ்நிலையில், காவிரி கண்காணிப்பு குழு பிறப்பித்த, தலையிடக் கூடாது. இடைக்காலமாக என்ன நிவாரணம் பெற விரும்பினாலும், பிரதமர் தலைமையிலான, காவிரி நதி நீர் ஆணையத்தில் தான், முறையிட வேண்டும். தற்போது, கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கே, தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. தமிழகத்துக்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது.இவ்வாறு, கர்நாடகா வக்கீல் வாதிட்டார்.
தமிழக அரசு சார்பான வக்கீல்,""காவிரி டெல்டா பகுதியில், கருகும் பயிர்களின் ஒரு பகுதியையாவது காப்பற்ற வேண்டும். எனவே, உடனடியாக, காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி, கர்நாடகா அரசுக்கு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.
இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில், இரு மாநிலங்களும், தங்களின் வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு, சுமுக தீர்வு காண, தவறி விட்டன. எனவே, தமிழகத்துக்கு, தண்ணீர் திறந்து விடும்படி, கர்நாடகா அரசுக்கு, இடைக்கால உத்தரவு எதையும், தற்போது பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கின் விசாரணை, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்படியே தீர்ப்புகள் உச்ச நீதி மன்றத்திடமிருந்து வந்தால் நொந்து கொள்வதை தவிர வேறு வழி ?இந்தியாவின் ஒருமைப்பாடு பற்றி பேசும் காங்கிரஸ் என்ன செய்ய போகிறது ?கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தால் போதும் என்றே செயல் படுகிறதா ?இங்கே தமி ழகத்தில் இருந்து மின் சாரம் கர்நாடகாவிற்கு வேண்டும்ஆனால் தண்ணீருக்கு பெப்பே வா ?ஜெய லலிதா துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் வல்லவர் பார்ப்போம்
தமிழக வழக்கறிஞர் உண்மையாலும் BL or LLB படித்து விட்டு தான் வந்தாரா ?? திரும்ப திரும்ப அதையே சொல்லி கொண்டுள்ளார் ?? வாதம் செய்ய சரியான பதில்கள் ஆதாரங்களை தெளிவாக உரக்க சொல்ல வேண்டித்தானே ?? உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சொதப்பல் , இங்கே தமிழ் நாட்டில் தனித்து முயற்சித்த ஜெயா சொதப்பல் ??? தீர்ப்பு - தமிழக மக்களுக்கு செவிட்டில் அறைந்த சம்மட்டி அடி..// நீ என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று உன் எதிரி தான் தீர்மானிக்கிறான் ... // அதுபோல இப்படி சாணி தட்டி கொண்டிருந்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வாங்க முடியாது.. ஏதோ அதிரடி அதிரடி ன்னு உங்க அல்ல கைகள் சொல்வாங்களே அதுபோல ஏதாவது செஞ்சா தான் அடிப்படை உரிமையை கொஞ்சமாது நிலை நாட்ட முடியும் .. இல்லையெனில் அடுத்த ஆண்டு , இனிவரும் ஆண்டுகளில் இன்னும் நிலைமை படுமோசமாக மாறி இறுதியில் தமிழகத்துக்கு உரிமையே இல்லை என்று சொல்லி விடுவர்.. விழித்திரு தமிழா...
இல்லாத தண்ணீரை எப்படி பங்கீடு செய்ய முடியும். நதிநீர் இணைப்பு திட்டம்தான் இதற்கு தீர்வு. ஊழலுக்கு அன்ன ஹசாரே நடத்தியதை போல, நதிநீர் இணைப்புக்கு இளைங்கர்கள் , விவசாயிகள் முன்வஎண்டும். வேண்டும். நதிநீரை இணைப்பு செய்யும் அரசுக்கே ஒட்டு என தீர்மானிக்க வேண்டும். நதிநீர் இணைப்புக்கான திட்டத்தை செயல்படுத்தினால் என் பங்காக ஒரு லட்சம் நிதி தருகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.