சிவகங்கை;சிவகங்கையில், ரூ.60 லட்சம் ஈமுகோழி மோசடி வழக்கில், விருதுநகர் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், சிவகங்கை ஏஜன்டை கைது செய்தனர்.
சிவகங்கை, காளையார்கோவில் அருகே நால்ரோட்டை சேர்ந்தவர் குமரன், 34. பெருந்துறை சுசி ஈமு கோழி பண்ணைகளின் சிவகங்கை ஏஜன்டாக உள்ளார்.
திருப்பாச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சியை சேர்ந்த கட்சராயன், நாச்சியப்பன், ராஜசேகர், செந்தில்குமார் உட்பட 20 பேரிடம், ஈமு பண்ணை வைக்க, தலா ரூ.1.50லட்சம் வீதம், ரூ.60 லட்சம் வரை வசூலித்துள்ளார். இதற்கிடையில், பல லட்சம் ரூபாய் மோசடியில் சிக்கிய சுசி ஈமு கோழி பண்ணை உரிமையாளர் குருசாமி ஏற்கனவே கைது செய்யப்பட்டார். சிவகங்கையிலும் மோசடி நடந்துள்ளதாக, இப்பகுதியினர் சிவகங்கை எஸ்.பி.,யிடம் புகார் செய்தனர்.
இது குறித்து, விருதுநகர் பொருளாதார குற்ற தடுப்புபிரிவு போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சிவகங்கை ஏஜன்ட் குமரன், மட்டுமே டெபாசிட் பெற்று, ரூ.60 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. குமரனை நேற்று முன்தினம் இரவு, பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கூட்டுறவுபட்டியில் பண்ணையில் உள்ள 150க்கும் மேற்பட்ட "ஈமு' கோழிகளுக்கு உணவின்றி தவிக்கின்றன. இது குறித்து மாவட்ட கால்நடைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.