சமச்சீர் கல்வி திட்டம் வந்த பின் மெட்ரிக் இயக்குனரகம் தேவையா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாநில பாடத் திட்டம்,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி ஆகிய, நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தியுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கென, தனியாக இயக்குனர் அலுவலகம் தேவையா, என்ற கேள்வி எழுந்து உள்ளது.மெட்ரிக் இயக்குனரகத்தின் கீழ், 4,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.


பழைய பெயர் எதற்கு?

புதிய பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளிகளுக்கு, அங்கீகாரத்தைப் புதுப்பித்து வழங்குதல், பள்ளிகளின் நிர்வாகங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை, இயக்குனரகம்கவனித்து வருகிறது.சென்னையில் உள்ள, இயக்குனர் அலுவலகம் மற்றும் 15 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் சேர்த்து, 70 பேர், பணியாற்றிவருகின்றனர்.நான்கு வகையான கல்விதிட்டங்களை ஒருங்கிணைத்து, பொது பாடத் திட்டம் உருவாக்கி, அமல்படுத்தப் பட்டுள்ளது.எனினும், தனியார் பள்ளிகளுக்கு, இன்னும், "மெட்ரிகுலேஷன்' என்ற பெயர் இருந்து வருகிறது. இந்த பெயரை மாற்றுவது குறித்து, தமிழக அரசு, எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.


"விதிமுறைகள் பழையதே':

மேலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனரகம் இயங்குவது, தேவையற்ற நிர்வாகச் செலவை ஏற்படுத்தும் என்றும், இந்த இயக்குனர் அலுவலகத்தை, பள்ளிக் கல்வி இயக்குனரகத்துடன் இணைத்து விடலாம் என்றும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரத்தினர் கூறியதாவது:பாடத் திட்டங்கள் மட்டும் பொதுவானதாக மாற்றப்பட்டு உள்ளன. ஆனால், நான்கு விதமான கல்வி திட்டங்களுக்கான சட்ட விதிமுறைகள், அப்படியே உள்ளன.மாநில பாடத் திட்டம்,ஆங்கிலோ இந்தியன் மற்றும்ஓரியண்டல் ஆகிய, மூன்று கல்வி முறைகளுக்கான நிர்வாகம், பள்ளி கல்வித்துறையின் கீழ் இருக்கிறது. நர்சரி பள்ளிகளுக்கான நிர்வாக கட்டுப்பாடு, தொடக்க கல்வித் துறையிடம் உள்ளது.அனைத்து நிர்வாகப் பணிகளையும், ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் எனில், முதலில் அதற்கான சட்ட விதிமுறைகளை நீக்கி விட்டு, பொதுவான சட்ட விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். இதை எல்லாம், அரசு தான் செய்ய வேண்டும்.


"பணிச்சுமை அதிகரிக்கும்':

இதை எதுவும் செய்யாமல், இயக்குனரகத்தை மட்டும், வேறொரு துறையுடன் இணைக்க முடியாது. ஏற்கனவே, பெரும் பணிச்சுமையுடன் இயங்கி வரும், பள்ளிக் கல்வி துறையிடம், தனியார் பள்ளிகளையும் ஒப்படைத்தால், மேலும் பணிச்சுமை அதிகரிக்கும்.இதனால், பல்வேறு நிர்வாக குழப்பங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, கல்வித் துறைவட்டாரத்தினர் தெரிவித்தனர்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார்கூறியதாவது:மெட்ரிகுலேஷன் என்ற பெயரை எடுத்து விட்டு, தனியார் பள்ளிகளுக்கான இயக்குனரகம் என, அமைக்கலாம். இந்த நிர்வாகத்தை, பள்ளிக் கல்வியுடன் இணைத்தால், நிர்வாகம் ஸ்தம்பித்து விடும். தனியார் பள்ளிகளுக்கு, பெரும் பிரச்னைகள் ஏற்படும்.


"நிரப்பப்படுமா?'

நிர்வாக வசதிக்காகவும், பள்ளிகளை முறையாக கண்காணிக்கவும் தான், தனி நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிர்வாக முறையில், சில குறைகள் உள்ளன. குறிப்பாக, 15 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்களில், 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.இவர்களால், தனியார் பள்ளிகளை, சரிவர கண்காணிக்க முடியவில்லை. அனைத்து காலி பணியிடங்களை நிரப்பியும், நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்த, உரிய நடவடிக்கை எடுத்தாலே போதும்.இவ்வாறு, நந்தகுமார்கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R N - Tiruchi,இந்தியா
25-பிப்-201318:19:39 IST Report Abuse
R N சி பி எஸ் இ பள்ளிகளில் முதல் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும், இந்தி திணிப்பு நிறுத்தப்பட வேண்டும், இல்லையென்றால் இப்பள்ளிகளில் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
30-ஜன-201308:41:20 IST Report Abuse
thirumalai chari சமச்சீர் கல்வி ஒரு கேவலம். இருபது ஆண்டு பின்னோக்கி நமக்கு தெரியாமலேயே இழுத்து செல்ல செய்யப்பட்ட சதி. இன்றைய மாணவன் வீட்டு பாடம் என்ற பேரில், தொலை தொடர்பு வசதியில், எதோ அதில் சில நோக்கத்துடன் பதிவு செய்திருக்கும் விஷயத்தை அச்சில் கொண்டு ஒட்டி மகிழும் வேலையைத்தான் செய்ய சொல்கிறது. சமச்சீர் கல்வி என்பது இந்திய மக்களின் மீது வெளிநாட்டு ஆதிக்க சக்திகளின் திணிப்பு.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
30-ஜன-201306:51:48 IST Report Abuse
ஆரூர் ரங சமச்சீர் ஒரு படுதோல்வி. தரம் கொஞ்சம்கூட உயரவே இல்லை. பழையபடி மெட்ரிக்கை கொண்டுவருவதே நல்லது
Rate this:
Share this comment
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
30-ஜன-201308:44:45 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் மொத்தமாகவே கல்வி தரம் இல்லை என்கிறேன் நான்...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
30-ஜன-201304:31:12 IST Report Abuse
K.Sugavanam சமசீர் கல்விக்கு முன்பே மெட்ரிக் என்ற பெயர் மதிப்பில்லாமல் போனது.காரணம் முன்பு கல்லூரிகளில் சேர மேற்றக் சான்றிதழ் தான் அதிகார பூர்வமா இருந்தது.அப்புறம் அந்த அதிகாரம் போனபின்பும் அதே பெயருடன் இறந்து வந்துள்ளது.அதிகாரம் இன்றி.
Rate this:
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
30-ஜன-201302:02:43 IST Report Abuse
குடியானவன்-Ryot """நம் நாட்டில் கல்வியை தனியாரிடம் விட்டுவிட்டு மது கடையை அரசு நடத்துகிறது. இதை எண்ணிப்பார்க்கும்போது ஜனநாயக இந்தியாவில் நான் ஓட்டு போடுவது வீண் என்று தோன்றுகிறது""" முதலில் தனியார் பள்ளிகள் matriculation என்ற சொல்லை தங்கள் பள்ளி பெயரில் இருந்து எடுக்கசொல்லி சட்டம் போடுங்கள். என் மகனை LKG சேர்க்க ஈரோடில் உள்ள நம் நாட்டின் பெயரில் தொடங்கும் பள்ளிக்கு சென்றேன். அவர்கள் என்னிடம் கொடுத்த கட்டண அட்டவனையை பார்த்து தலை சுற்றியது Deposit 15,000 (refundable) Application fee 60,000 (non-refundable), Term fee 25,000 x 3 = 75,000, van fee 4500 x 3 = 13,500, Book fee 6,000, Uniform fee 6,000 Grand total = 1,75,500. அடுத்த ஆண்டில் இருந்து Deposit & Application fee நீங்களாக 1,00,500 கட்டவேண்டும். ஏன் அதிக தொகை வசூலிக்கபடுகிறது என்று விசாரித்தபோது அதை நடத்தும் டாக்டர் கூறுகிறார், இது Cambridge Syllabus மற்றும் 9 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் மற்றும் பள்ளி மற்றும் வாகனம் AC வசதி செய்யபட்டுள்ளது என்கிறார். ஆனால் இந்த பள்ளியில் 2 வகுப்பு படிக்கும் என் அக்காவின் மகளை கேட்டால் வகுப்பில் 31 பேர் இருப்பதாக கூறுகிறாள், இவர்கள் போடும் முதல் நிபந்தனை : பெற்றோர்கள் வகுப்பறைக்கு செல்ல கூடாது, குழந்தை பள்ளி வாகனத்தில்தான் வரவேண்டும். இதனாலோ என்னவோ இந்த பள்ளி ஈரோடு நகராட்சியை விட்டு 15 kms தொலைவில் ஒரு குக்கிரமத்தில் உள்ளது. இதை எல்லாம் பார்க்கும்போது எனக்கு 3 சந்தேகம் எழுகிறது. 1, Cambridge Syllabus வாயிலாக பாடம் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளதா? 2 Cambridge Syllabus வாயிலாக படிக்கும் மாணவர்களை அரசு நடத்தும் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்கிறதா? 3 மத்திய அமைச்சர் திரு பள்ளம் ராஜு அவர்களின் மனிதவள மேம்பாட்டுத்துறையும் மற்றும் தமிழக அமைச்சர் திரு. N.R சிவபதி அவர்களின் பள்ளி கல்வி துறை சரியாக செயல்படுகிறதா? என் மன குமுறலுக்கு வடிகால் அமைத்து தந்த தினமலருக்கு நன்றி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்