புதுடில்லி:""இந்திய குடிமக்களின் பாதுகாப்பை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; நீங்கள் உங்கள் நாட்டு மக்களை கவனித்து கொள்ளுங்கள். தேவையில்லாமல், எங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்,'' என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கு, மத்திய உள்துறை செயலர், ஆர்.கே.சிங் பதில் அளித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான், மும்பையில், தன் மனைவி, கவுரியுடன் வசிக்கிறார். "பொது இடங்களில், மது அருந்தி குழப்பம் ஏற்படுத்தினார்' என்றும், "புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட இடங்களில், மீறி புகை பிடித்தார்' எனவும் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் இவர்.சில நாட்களுக்கு முன், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் ஷாருக் கான், "நான் முஸ்லிம் என்பதால், என்னை இந்திய குடிமகனாக இந்திய அரசியல் கட்சிகள் சில நினைப்பதில்லை. என் தந்தை, தேச விடுதலைக்காக பாடுபட்டவர். எனினும், என்னை இந்தியாவிலிருந்து விரட்டி, பாகிஸ்தானுக்கு அனுப்பி விட சிலர் துடிக்கின்றனர்' என்ற ரீதியில் பேசியிருந்தார்.
இதை அறிந்த, இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான, லஷ்கர் - இ - தொய்பா தலைவன், ஹபீஸ் சயீது, "இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என, ஷாருக் உணர்ந்தால், பாகிஸ்தான் வந்து விடட்டும்; தேவையான, பாதுகாப்பு வழங்கப்படும்' என, கூறினான்.இதற்கு ஷாருக் கான் இது வரை எந்த பதிலும் கூறாமல், வாய்மூடி மவுனியாக இருக்கும் நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரான, ரகுமான் மாலிக், இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கி விட்டார்.இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்திய தூதர் மற்றும் அதிகாரிகளுக்கு, கடந்த, 26ம் தேதி, பாகிஸ்தானில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், பாக்., உள்துறை அமைச்சர், ரகுமான் மாலிக் பேசியதாவது:ஷாருக் கான் இந்திய குடிமகன்; அவருக்கு சக இந்தியர்கள் போலவே மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும். அதில் எந்த குறைவும் இல்லாத வகையில், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மக்கள் அனைவரும், ஷாருக்கை தங்கள் நாட்டினர் போலவே கருத வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
அவரின் பேச்சு, பிரச்னையை மேலும் தீவிரமாக்கிவிட்டது.
அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய உள்துறை செயலர், ஆர்.கே.சிங் நேற்று கூறுகையில், ""எங்கள் குடிமக்களுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்க எங்களுக்கு தெரியும்; உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். எங்கள் விவகாரத்தில் வீணாக தலையிட வேண்டாம்,'' என்றார்.க்ஷக்ஷநடிகர் ஷாருக் கானின் பேச்சு, அதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து, அவர் இன்னும் கருத்து தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற, கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.
பாக்., இந்துக்களை கவனிங்க! பா.ஜ., - காங்., கடும் கண்டனம் :
ஷாருக் கானுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் அமைச்சர் குரல் கொடுத்தது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ராஜிவ் பிரதாப் ரூடி நேற்று கூறியதாவது:இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படுவது போன்ற சுதந்திரம், வேறு எந்த நாட்டிலும் இல்லை. தங்கள் நாட்டு சிறுபான்மையினரை அழித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவை எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது. பாக்., அமைச்சருக்கு, ஷாருக் கான் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.,வின் மற்றொரு செய்தி தொடர்பாளரான,ஷா நவாஸ் உசேன் கூறியதாவது:ஷாருக்கின் நடிப்பு திறமையை வைத்தே அவரை ரசிக்கின்றனர்; அவரை முஸ்லிம் என, யாரும் பார்ப்பதில்லை. பாலிவுட்டில், திலீப்குமார், மதுபாலா, மீனா குமாரி, ஜானி வாக்கர் என, ஏராளமான முஸ்லிம் நடிகர்கள் இருந்தனர்.அவர்களுக்கு எந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு தான், சல்மான் கான், ஷாருக் கான், சைப் அலி கான் போன்ற இப்போதைய முஸ்லிம் நடிகர்களுக்கும் வழங்கப்படுகிறது. நடிப்பை தான் பார்க்கிறோமே தவிர, மதத்தை பார்ப்பதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர், சஞ்சய் ரவுத் கூறும் போது, ""இந்திய விவகாரத்தில் பாகிஸ்தான் மூக்கை நுழைக்க தேவையில்லை. அந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எந்த உரிமையும் கிடையாது; இந்தியாவில் அப்படியில்லை என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதைய நிலையில், ஷாருக் கானை விட, தமிழகத்தை சேர்ந்த நடிகர், கமல்ஹாசனுக்கு தான் அதிக பாதுகாப்பு வழங்க வேண்டும்; ஏனெனில், கமல்ஹாசனுக்கு தான் அதிக மிரட்டல் வந்துள்ளது,'' என்றார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மத்திய அமைச்சருமான, மணீஷ் திவாரி கூறுகையில், ""பாக்., உள்துறை அமைச்சர், அந்நாட்டின் உள்விவகாரங்கள் குறித்து மட்டுமே கவலைப்பட வேண்டும். தேவையில்லாமல் இந்திய விவகாரத்தில் தலையிட வேண்டாம். பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையின இந்துக்கள் நிலையை அவர் முதலில் மேம்படுத்தட்டும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த ஷாருக்,சல்மான் போன்ற கான்கள் என்ற கூத்தாடிகள் எல்லா தவறுகளையும் செய்வார்கள்....அதற்க்கு எதிர்ப்பு வந்தால் நான் ஒரு முஸ்லிம்ன்னு மத போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள்...முதலில் நீ ஒரு உண்மையான முஸ்லிமாக இரு...பிறகு உன் மத அடையாளங்களை வெளியில் சொல்....நீ செய்வதெல்லாம் அயோக்கியத்தனம்..உனக்கு மதம் ஒரு கேடா? இவன் சொல்லிட்டான்னு இவனுக்கு ஆதரவா ஒரு கும்பல் இதையும் போராட்டமாக்குவார்கள்....ஷிண்டே போன்ற உள்துறை அமைச்சர் இருந்தால் தீவிரவாதி ஹபீஸ் சையத் வந்து சோனியாவுடனும்,மக்கு மோகனிடமும் உட்கார்ந்து விருந்து சாப்பிட்டுவிட்டு இந்தியாவின் அணு குண்டையும், ஏவுகணைகளையும் பரிசாக கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ....
இவர் ஒரு அடுத்த அசாருதீன். தன்னைக் கேப்டனாக்கியதே இந்துத் தேர்வாளர்கள் என்பதை மறந்து ஊழல் சூதாட்ட வழக்கில் மாட்டிக்கொண்ட்வுடன் தான் ஒரு முஸ்லிம் என்பது அவருக்கு திடீர் ஞாபகம் வந்தது மத அடிப்படையில்தான் தான் பழிவாங்கப்படுவதாக உளறினார். இப்போ அடுத்ததா ஷாருக்கும் தான் முஸ்லிம் என்பதால் குறை கூறுகிறார்கள் என பிதற்றுகிறார். இவர் செய்வதெல்லாம் இஸ்லாதுக்காவது ஏற்புடையதாக இருக்கிறதாவென்றால் அதுவுமில்லை.இந்தித் திரையுலகை ஆட்டிவைக்கும் மூன்று கான்களின் ரசிகர்களில் தொண்ணூறு விழுக்காடு முட்டாள் இந்துக்கள்தான். அவர்கள் கண்ணில் இவர்கள் வெறும் நடிகர்களாக மட்டுமே தெரிகின்றனர். விளம்பர மோகத்தில் தேவையில்லாமல் தடம் மாறுகிறார். .இன்று கூட பற்பல இந்திப் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதே தாவூத் இப்ராஹிம் எனும் பயங்கரவாதி என்பதால் இவர் இதுபோல பேசுவது அதிசயமில்லை.துரதிருஷ்டவசமாக இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானோருக்கு முதலில் மதபக்திக்கு அடுத்ததாகவே தேசபக்தி. ஏற்கனவே மத அடையாளங்களை பொது இடங்களில் காட்டிக்கொண்டு அலைவதன மூலம் தம்மை சந்தேகத்துக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்தனம் இவரையும் விரைவில் பிடிக்கும். இவரை நம்பியுள்ள கௌரி மற்றும் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள். இன்னும் இவர் படங்களை பார்ப்பதும் ஆதரிப்பதும் பாகிஸ்தானுக்கு வால் பிடிப்பதற்கு சமம்
சாருக்கான், யானை தன தலையில் மண்ணை வாரிப்போட்டுகொள்வது போல, கண்டபடி பேசிவிட்டு முழி பிதுங்குகிறார். அவரை சப்போர்ட் பண்ணுகிறோம் பேர்வழி என்று பாகிஸ்தானும் அவரை நன்கு குழிக்குள் இறக்கி விட்டிருக்கிறது. இதிலிருந்து மீள கஷ்டப்படத்தான் வேண்டும். இனி அவருக்கு முன்பு இருந்த செல்வாக்கும் மரியாதையும் கிடைக்காது.நுணலும் தன வாயால் கெடும்
அந்த பாகிஸ்தான் அமைச்சர் மட்டுமல்லாமல், அந்த தீவிராத அமைப்பின் தலைவன் சையது பேசியதும் சின்ன பிள்ளை தனமானது...ஷாருக்கான் ஒன்றும் ஏழை அல்ல...மிக பெரிய கோடீஸ்வரன்...இந்திய மண்ணும் இந்திய ரசிகர்களும் கோடிகளை வாரி அவருக்கு கொடுத்துள்ளனர்...அவர் இந்தியாவில வாழ வழி இல்லை என்றால் உலகத்தின் எந்த மூலைக்கும் போய் வாழும் அளவிற்கு பணம் உள்ளது...இந்த பாகிஸ்தானிகள் உலகில் ஏழ்மையில் வாடும் ஏழை முஸ்லிம்களை கூப்பிட்டு அவர்களை வறுமையில் இருந்து பாதுகாத்து இருக்க வேண்டும்...ஆனால் பணக்கார ஷாருக்கானை கூப்பிடுவது அவரிடம் ஒரு நூறு கொடு நன்கொடை வாங்கி இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை தயார் படுத்த தான் என்பதை இங்குள்ள முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...அமீர்கானும் ஒரு முஸ்லிம் தான். அவர் எவ்வளவு சிறந்த நடிகராகவும், மனிதராகவும் இருக்கிறார்...ஆனால் இந்த ஷாருக்கான், சல்மான் கான், போன்றவர்கள் தான் என்ன வேண்டுமானாலும் செய்யாலாம், போலீஸ் நிர்வாகமும் சட்டமும் தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம். IPL மாட்சின் பொது ஷாருக் கான் குடித்துவிட்டு கலாட்டா செய்தது எல்லாருக்கும் தெரியும் தானே...சல்மான் கான் தடை செய்யப்பட்ட வன பகுதிக்கு சென்று மானை வேட்டையாடியது எல்லாருக்கும் தெரியும் தானே. பின்பு எப்படி முஸ்லிம் என்பதால் தான் இவர்களை ஏளனமாக பார்கிறார்கள் என்று நீலி கண்ணீர் வடிக்கிறார்கள்...இவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தால் யார் இவர்களை குற்றம் சொல்ல போகிறார்கள்...
இந்தியர்கள் வாரி வாரி வழங்கா விட்டால் இந்த கான்கள் எப்படி இப்படி ராஜா மாதிரி வாழ்க்கை நடத்த முடியும். நன்றி கெட்ட தனமாக பேசினால் இவர்களுக்கு ஆப்பு வைக்கும் நாள்கள் வெகுதொலைவில் இல்லை. நீங்கள் கூறுவதைப்போல் அமீர்கானை எல்லோரும் நல்லவர் என்றே கூறுகின்றனர். ஏன்? அவர் நல்ல மனிதன் மாதிரி நடக்கிறார். இவர்கள் கொழுப்பெடுத்து ஆடுகிறார்கள்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.