Karunanidhi, Stalin plan to boycott Alagiri birthday function? | அழகிரி பிறந்தநாள் விழா:கருணாநிதி, ஸ்டாலின் புறக்கணிக்க முடிவு?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அழகிரி பிறந்தநாள் விழா:கருணாநிதி, ஸ்டாலின் புறக்கணிக்க முடிவு?

Added : ஜன 29, 2013 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அழகிரி பிறந்தநாள் விழா:கருணாநிதி, ஸ்டாலின் புறக்கணிக்க முடிவு?,Karunanidhi, Stalin plan to boycott Alagiri birthday function?

மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்த தினத்தை ஒட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் மதுரைக்கு செல்லவில்லை என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுரையில், இன்று மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்ததினத்தை ஒட்டி, ஏழைகளுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தென் மண்டல, தி.மு.க., தொண்டர்களிடம், அழகிரி வாழ்த்துக்களை பெறுகிறார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளார் ஸ்டாலின் ஆகியோர் மதுரை சென்று, அழகிரிக்கு வாழ்த்து தெரிவிப்பர் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் எழுந்திருந்தது.இந்நிலையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை விமர்சித்து, அழகிரி ஆதரவாளர்கள் பரபரப்பான, "பஞ்ச்' வசனங்கள் கொண்ட போஸ்டர்களை, சென்னையில் ஒட்டியது, கருணாநிதிக்கு அதிருப்தியை அளித்துள்ளது. இதனால், இன்று மதுரையில் நடக்கும் அழகிரி பிறந்த தினவிழாவிற்கு, கருணாநிதி செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

அதேபோல், நேற்று முன்தினம் டில்லியிலிருந்து, சென்னைக்கு திரும்ப இருந்த ஸ்டாலினின் பயண திட்டம், கடைசி நேரத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவர், டில்லியில் கூடுதலாக இரு நாட்கள் தங்கியிருந்து, "டெசோ' தீர்மானங்களை, ஐ.நா., சபை உறுப்பு நாடுகளின் தூதர்களிடம் வழங்க திட்டமிட்டுள்ளார். ஸ்டாலின் இன்று காலை டில்லியில் இருப்பதால், அழகிரியின் பிறந்த தின விழாவிற்கு அவரும் செல்லவில்லை. மதுரையில் உள்ள ஸ்டாலின் ஆதரவாளர்களும், அழகிரியின் முன்னாள் ஆதரவாளர்கள் சிலர், ரகசியமாக கூட்டம் நடத்தி, அழகிரி பிறந்த தின விழாவை, புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
30-ஜன-201307:23:47 IST Report Abuse
K.Balasubramanian அவனவன் அடுத்த வேலை உணவுக்கு அல்லாடும் போது இந்த அமர்க்களம் வேண்டுமா ? வசதி இருப்பவர்கள் ,பகுத்தறிவாளர்கள் , கேக் வெட்டட்டும் .
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
30-ஜன-201306:52:51 IST Report Abuse
Nandu உறவாடுவதும், பதவியைக் காட்டினால் பகையாவதும், சாடை மாடியை திட்டிக் கொள்வதும், பின் பல்லிளித்துக் கட்டிகொல்வதும், இந்த நாடகங்களைக் காணவா நாட்டு மக்கள் உள்ளனர்?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
30-ஜன-201306:38:16 IST Report Abuse
ஆரூர் ரங வடக்கு வாழ்கிறது .பறக்கியது.ஆடுகிறது. ஆனால் தெற்கு தேய்கிறது திராவிடனே கொடுவாளை எடடா.
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
30-ஜன-201306:36:59 IST Report Abuse
Nandu "ஏன் பிறந்தாய்??" என ஊரார் நினைக்க, இதற்கெல்லாம் பிறந்த நாள் வேறு கொண்டாட்டம் வேறு
Rate this:
Share this comment
Cancel
Anniyan Bala - Chennai,இந்தியா
30-ஜன-201306:36:21 IST Report Abuse
Anniyan Bala இவை எல்லாம் வரலாற்று கல்வெட்டில் பதிக்க பட வேண்டிய நிகழ்வுகள்.
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
30-ஜன-201306:24:18 IST Report Abuse
Aboobacker Siddeeq இதுவரை தென்மாநிலங்களில் இருந்த அஞ்சா நெஞ்சரின் செல்வாக்கை இனி தமிழமெங்கும் விரிவுபடுத்தி விளம்பரம் அளிக்கும் தி.மு.க.வின் தற்போதைய தலைவருக்கும் வரப்போகும் ( முன் மொழியப்பட்ட ) தலைவருக்கும் நன்றிகள்.
Rate this:
Share this comment
Cancel
sombu - chennai,இந்தியா
30-ஜன-201306:17:19 IST Report Abuse
sombu மகன் தந்தையிடம் சென்று வாழ்த்து/ ஆசிர்வாதம் வாங்குவதுதானே பண்பாடு. இளந்தலைமுறையினர் மத்தியில் நல்ல கருத்தை விதைக்க மிடியாக்கள் கடமைப்பட்டுள்ளன என்பதை மறக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
30-ஜன-201306:11:08 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற தலைசிறந்த கவிதை எழுதிய கலைஞரால் ஒரு குடும்பப்பாடல் எழுதி , உதடு துடிக்க, கட்டிப்பிடித்து, அழுது அண்ணன் தம்பி இருவரையும் சேர்த்து வைக்க முடியாதா?
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
30-ஜன-201305:32:14 IST Report Abuse
jagan இனிமே இதயம் இன்னிக்கும், மங்கா புளிக்கும், பாவக்கா கசக்கும், ... சிங்கள் டீக்கு (தொண்டனுக்கு) பொறையும் கிடைக்கும்......
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
30-ஜன-201305:29:12 IST Report Abuse
Guru எவ்ளோ கஷ்டத்திற்கு நடுவிலும் குடும்ப விழாக்களை புறக்கணிக்காமல் அதில் கலந்து கொண்டவர் திரு அழகிரி... அந்த பெருந்தன்மை தலைமையிடம் இருக்குமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை