லக்னோ:""என் மகளை, பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரில் ஒருவன், மைனர் என்பதால், அவனுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கூடாது; அவனையும் தூக்கில் போட வேண்டும்,'' என, பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த, டில்லி மாணவியின் தந்தை, ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட, மருத்துவ மாணவியின் தந்தை கூறியதாவது:என் மகளை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவர்களில் ஒருவன், மைனர் என, சிறார் நீதி வாரியம் அறிவித்துள்ளது. இதனால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டு மட்டுமே, அவனுக்கு தண்டனை கிடைக்கும்.கோர்ட்டின் இந்த அறிவிப்பு, துரதிருஷ்டவசமானது. அந்த நபர், வயதில் சிறுவனாக இருந்தாலும், மிக கொடிய குற்றத்தை செய்துள் ளான். வயதை அடிப்படையாக வைத்து, அவனுக்கு கருணை காட்டக் கூடாது. அதிகபட்ச தண்டனையாக, அவனுக்கு, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
தூக்கு தண்டனைக்கு குறைந்து, அவனுக்கு, வேறு எந்த தண்டனை கொடுத்தாலும், அதை எதிர்ப்போம். இந்த வழக்கில் தொடர்புடைய, மற்ற குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறதோ, அதே தண்டனையைத் தான், இவனுக்கும் கொடுக்க வேண்டும்.சிறார் நீதி வாரிய உத்தரவை எதிர்த்து, விரைவில், மேல் முறையீடு செய்யவுள்ளோம். இதற்காக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். சிறார் வயது வரம்பை குறைக்க, சட்ட திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்ட பிறந்த தேதியின் அடிப்படையில், அவனை, மைனராக, சிறார் கோர்ட் அறிவித்துள்ளது. பள்ளிச் சான்றிதழில், மோசடி செய்ய, வாய்ப்புள்ளது அல்லவா?இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மைனர்களை வைத்து பயங்கரவாத செயல்கள் புரிவதும் அதிகரித்து வருகிறது. இதற்காக அவர்கள் மத பாடசாலைகளில் மூளைச் சலவை செய்யப்பட்டு தயார் செய்யப்படுகிறார்கள் இந்தப் பள்ளிகளை மூடும்வரை மைனர்களை தவறாகப் பயன்படுத்துவதும் குறையப் போவதில்லை .மைனர்கள் என்பதால் மாட்டிக்கொண்டாலும் சில நாள் சீர்திருத்தப்பள்ளி வாசத்துக்குப்பிறகு, அவர்களை மீண்டும் பிற தீவீரவாத சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கப் பயன்படுத்துகின்றனர். எனவே பயங்கரவாதத்தில் ஈடுபடும் சிறார்களை நிர்ந்தரமாக தனிமை சிறையிலடைக்கவேண்டும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.