Advertisement
கட்சி சின்னங்களுடன் மிரட்டியவர்களுக்கு, "அதிர்ச்சி வைத்தியம்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,00:05 IST

உத்தர பிரதேசத்தில், ஆளும் சமாஜ்வாதி கட்சி கொடி, சின்னம், தலைவர்கள் பெயர்களை வாகனங்களில் ஒட்டி, போலீசாருக்கும், அரசு அதிகாரிகளுக்கும், கிலி ஏற்படுத்திய, 3,500 பேர் மீது நடவடிக்கை எடுக்க, கட்சி தலைவர், முலாயம் சிங் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்த கட்சியின் தேர்தல் சின்னங்கள், கட்சி கொடி, தலைவர்களின் அடைமொழி போன்றவற்றை வாகனங்களில் ஒட்டி, பிறருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பழக்கம் நாடு முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.உத்தர பிரதேசத்தில் இந்த பழக்கம் சற்று அதிகமாகிவிட்டது. ஆளும், சமாஜ்வாதி கட்சியினர் மட்டுமின்றி, கட்சிக்கு சம்பந்தம் இல்லாத நபர்களும், ஆளும் கட்சி கொடி, தலைவர்கள், அகிலேஷ், முலாயம் படங்களை தங்கள் வாகனங்களில் ஒட்டி, போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.இம்மாதம், 22ம் தேதி, லக்னோவில் நடந்த கட்சி கூட்டத்தில், "கட்சி தொண்டர்கள் யாரும், கட்சி கொடி, சின்னம் போன்றவற்றை வாகனங்களில் வரையவோ, ஒட்டவோ கூடாது' என, கட்சி தலைவர் முலாயம் சிங் உத்தரவிட்டார்.கட்சியின் முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் தான், அவற்றை பயன்படுத்த வேண்டும் என, கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.

" தலைவர் சும்மா சொல்கிறார்; நடவடிக்கை எடுக்க மாட்டார்' என, நம்பியிருந்த கட்சியினருக்கும், பிறருக்கும், முலாயம் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.மாநிலம் முழுவதும், 15 கமிட்டிகளை அமைத்து, கட்சி சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டார். இரண்டு நாட்களிலேயே, 3,500 பேர் கொண்ட பட்டியல் தயாராகிவிட்டது. அவர்களை கட்சியை விட்டு நீக்குமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.தொடர்ந்து கண்காணிப்பை பலப்படுத்தவும், மாவட்ட நிர்வாகங்களுக்கு, முலாயம் உத்தரவிட்டுள்ளார்.உத்தர பிரதேசத்தில், முலாயம் மேற்கொண்ட அதிரடி போல், தமிழகத்தில் முதல்வர் துவக்குவரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சியில், அந்த கட்சியினர் மட்டுமின்றி, கட்சியின் எடுபிடிகளும், கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களும், "தளபதி' என்றும், "தமிழே' என்றும், "அஞ்சாநெஞ்சன்' என்றும், கறுப்பு, சிகப்பு வண்ணத்தை கொடியுடன், அடாவடியில் ஈடுபட்டதாக பொதுமக்கள் குறைபட்டனர்.அதற்கு பிறகு வந்துள்ள, அ.தி.மு.க., ஆட்சியிலும், அதே நிலைமை தொடர்கிறது. "அம்மா' என்றும், "தமிழ் தாய்' என்றும், அ.தி.மு.க., கட்சியினர் மட்டுமின்றி, ஏராளமானோர், போலீசாரையும், பொதுமக்களையும் மிரட்டி வருவது, எப்போது தடை செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- நமது நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (11)
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
30-ஜன-201308:12:48 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இதை பாரம்பரியமாகவே ஆக்கி விட்டனர் இந்த அல்லகைகள் ... அதிலும் தமிழ்நாட்டில் ரொம்ப மோசம் ... இப்போதைய ஆட்சியில் ரொம்ப ரொம்ப மோசம் ..
Rate this:
7 members
1 members
31 members
Share this comment
Nandu - Chennai,இந்தியா
30-ஜன-201306:48:17 IST Report Abuse
Nandu கட்சிக் கொடிகளையும் கட்சி தலைவரில் படங்களையும் வாகனத்தில் வைத்துகொண்டு ஊருக்குள் அட்டகாசம் செய்வதும், toll கேட்டில் பணம் கட்டாமல் நழுவிச் செல்வதும்... அரசியல் சாயம் பூசிக்கொண்டு ஆடாத ஆட்டம். கல்வியாளர்கள் இருக்க வேண்டிய அரசியலில் கசடுகள்..
Rate this:
2 members
0 members
14 members
Share this comment
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
30-ஜன-201306:36:00 IST Report Abuse
JALRA JAYRAMAN சாண்டில்யன் அவர்கள் கருத்து தான் இன்றைய நிலை. அமைச்சர் பெருமக்கள் நன்றாக சாப்பிடுவர். தொண்டன் வேடிக்கை பார்க்க வேண்டுமா?
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Anniyan Bala - Chennai,இந்தியா
30-ஜன-201306:16:45 IST Report Abuse
Anniyan Bala கட்சி சின்னம் மட்டும் இல்ல. குடிக்க கஞ்சி இருக்கோ இல்லையோ தலைவர்கள் பெயரில் அவர்களது அல்லகைகள் அடிக்கும் அலப்பறைக்கு அளவே இல்லை.
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
30-ஜன-201305:59:17 IST Report Abuse
P. Kannan கட்சி காரங்க எல்லோரும் அதுபோல் செய்வது இல்லை. ஸ்மார்ட் என்று தன்னை தானே நினைத்து கொண்டு கொஞ்சம் பேர் செய்வது கட்சியின் இமேஜ் பாதிக்கிறது என்று தெரிந்தால் கட்சி தலைமை கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டும். முலாம் சிங் நடவடிக்கை சரியே. இங்கு உள்ள கட்சிகள் செய்யுமா??????
Rate this:
57 members
0 members
14 members
Share this comment
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
30-ஜன-201304:18:54 IST Report Abuse
K.Sugavanam அதுக்கெல்லாம் நேரம் இல்லே..
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
30-ஜன-201303:14:32 IST Report Abuse
குடியானவன்-Ryot தமிழகத்தில் இதை ஒரு சட்டமாக ஆக்கலாம்...
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
virumandi - madurai,இந்தியா
30-ஜன-201302:57:26 IST Report Abuse
virumandi இது போன்று அனைவரும் தங்களின் கருத்தை கூறினால் ஓகே தான்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
tamilnidhi - chennai,இந்தியா
30-ஜன-201302:13:35 IST Report Abuse
tamilnidhi முலாயம் ஒன்றும் முட்டாள் தலைவரல்ல. அவர் அப்படிதான் சொல்லுவார் மக்களை கவர. ஓட்டுகளை வெல்ல. அதற்காக அதை செயல்படுத்தி விடுவார் என்று தினமலர் ஒரு சின்ன குழந்தை போன்று நம்புவதை பார்த்து சிரிக்கத்தான் தோனுகிறது. கட்சிக்கு யார்தான் ஒட்டு கேட்கபிறகு போவார்கள்? கட்சி செல்வாக்கை உபயோகபடுத்தி காசு பண்ணாமல் சொந்த வீட்டை விற்று கட்சிக்கு செலவு பண்ண தொண்டர்கள் என்ன முட்டாள்களா?
Rate this:
3 members
0 members
19 members
Share this comment
Samir - Trichy,இந்தியா
30-ஜன-201301:47:19 IST Report Abuse
Samir //அ.தி.மு.க., ஆட்சியிலும், அதே நிலைமை தொடர்கிறது. "அம்மா' என்றும், "தமிழ் தாய்' என்றும், அ.தி.மு.க., கட்சியினர் மட்டுமின்றி, ஏராளமானோர், போலீசாரையும், பொதுமக்களையும் மிரட்டி வருவது, எப்போது தடை செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.//
Rate this:
0 members
0 members
23 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.