திருநெல்வேலி: விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று வைகோ, நெல்லையில் ஆர்ப்பாட்டம் செய்கிறார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லை.
இதனால் கார் பருவம், பிசான சாகுபடி என தொடர்ந்து நெல் உற்பத்தியும், பிற பயிர்கள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுவருகிறது. சங்கரன்கோவில் அருகே 18 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த மக்காச்சோளம் பயிர் கருகிப்போனதால் வரகனேரி விவசாயி ஜெகநாதன், 48, தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே இந்த பகுதியில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். எனவே தென்மாவட்டங்களில் விவசாயிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று (ஜன.,30) நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையம் முன் கட்சியினருடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். இதே பிரச்னைக்கு வரும் பிப்., 6ம் தேதி சென்னையிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.