நங்கவள்ளி: ஜலகண்டபுரம் கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த, அ.தி.மு.க., - கம்யூ., கட்சி தொண்டர்களின் இரு மொபெட்களில், ஒரே பதிவு எண் எழுதப்பட்டிருந்தது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர், டிரைவர் பழனிச்சாமி. கம்யூ., கட்சி தொண்டரான இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரு மொபெட் வாங்கினார். நேற்று, ஜலகண்டபுரம் கடைவீதியின் ஒரு பகுதியில் மொபெட்டை நிறுத்திய பழனிச்சாமி, அருகிலுள்ள மற்றொரு கடைக்கு சென்றார். அப்போது கடை அருகில், தன் மொபெட்டின் அதே பதிவு எண் கொண்ட இன்னொரு மொபெட், கடைக்கு முன் நிறுத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடை அருகில் நிறுத்தியிருந்த மொபெட், ஜலகண்டபுரத்தை சேர்ந்த கோவில் பூசாரியும், அ.தி.மு.க., தொண்டருமான, பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. டிரைவர் பழனிச்சாமி, பூசாரி பழனிச்சாமி இருவருமே, மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரே மாடல் மொபெட் வாங்கியுள்ளனர். அந்த மொபட்களில் ஒரே பதிவு எண் எழுதப்பட்டிருந்தது, இருவருக்குமே நேற்று தான் தெரிய வந்தது. விபரீதத்தை உணர்ந்த இருவரும், உடனடியாக அங்கிருந்து தங்கள் மொபெட்டை ஓட்டி சென்று விட்டனர். மொபெட் உரிமையாளர் இருவர் பெயரும் பழனிச்சாமி என்பதால், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏதேனும் குளறுபடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.