சென்னை: ""சட்டசபை, லோக்சபாவில் தனித் தொகுதிகளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள், ஆதிதிராவிடர்களுக்கு பிற சமூக உரிமைகளை மறுத்து, ஜாதி கட்டமைப்பை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்,'' என, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ., கூறினார்.
சென்னை பல்கலைக் கழக, அம்பேத்கர் பொருளாதார கல்வி மையம் சார்பில் நடந்த, அம்பேத்கர் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், ஜாதிகள் ஒழிக்கப்படுகிறது; அனைவரும் சமம்; அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் ஜாதிகள் ஆதிக்கத்தில் தான், வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. ஜாதி மறுப்பு திருமணங்களையும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தையும் ஏற்க மறுக்கின்றனர். மனிதனின் மலத்தை மனிதன் சுமக்கக் கூடாது என, 1993ல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கான அரசாணை, இதுநாள் வரை வெளியாகவில்லை. இதேபோல், ஆதிதிராவிட மக்களுக்கு சமூகத்தில் இருக்கும் இழிவுகளை நீக்கி, சம உரிமைகள் வழங்க மறுக்கின்றனர். சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவே, ஆதிதிராவிட மக்களுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் உரிமை என, அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், இத்தொகுதிகளில் வெற்றிபெற்ற ஆதிதிராவிடர்கள் யாரும், முதல்வராகவோ, பிரதமராகவோ இதுவரை ஆனதில்லை. சமூக உரிமைகளை ஆதிதிராவிடர்களுக்கு வழங்கினால், ஜாதி அமைப்புகள் ஆட்டம் கண்டுவிடும் என, அச்சப்படுகின்றனர். ஜாதிய அணுகுமுறையில், புதிய பரிணாமங்கள் தான் உருவாகியுள்ளன. ஜாதி ஒழிப்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இவ்வாறு, தழிழரசன் பேசினார். சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் தாண்டவன் தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்தையா மாரியப்பன், அம்பேத்கர் பொருளாதார கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.