Advertisement
இளைஞர் காங்., நிர்வாகிகளிடம் டில்லி மேலிடக்குழு விசாரணை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2013,00:19 IST

தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்பாடுகள், டில்லி மேலிடத்திற்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது. இதனால், 39 லோக்சபா தொகுதிகளின் நிர்வாகிகளிடம், டில்லி மேலிடக்குழு, நேற்று தனித்தனியாக, விசாரணை நடத்தியது.
கட்சி செயல்பாடுகளில் சரியில்லாத நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, மேலிட விசாரணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக இளைஞர் காங்கிரசுக்கு, புதிய நிர்வாகிகள் நியமித்து, ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. சில மாதங்களாக, கட்சி வளர்ச்சிக்கு புதிய நிர்வாகிகளின் பங்களிப்பு சரியில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகளுக்கு ஆர்ப்பாட்டம், போரட்டங்களை நடத்தவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழக இளைஞர் காங்கிரசை சீர்படுத்த வேண்டும் என, மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இளைஞர் காங்கிரஸ் கலந்தாய்வு கூட்டம் சுத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர், லிஜு தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழுவினர், லோக்சபா தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டிய, பாகிஸ்தான் ராணுவத்தினரை கண்டிக்கும் வகையில், அந்நாட்டின் தேசிய கொடியை எரித்த புகைப்படங்களை, திருவள்ளூர் லோக்சபா தொகுதி தலைவர் அருண்பிரசாத், மேலிடக் குழுவினரிடம் காட்டினார். கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டங்களை பற்றி, சில லோக்சபா தொகுதி தலைவர்கள் எடுத்துக் கூறினர். சில லோக்சபா தொகுதிகளில், கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளை, போட்டோ ஆதாரங்களுடன் நிர்வாகிகள் சமர்பித்தனர். நிர்வாகிகளின் செயல்பாடுகளை பொறுத்து, ஒவ்வொருவருக்கும் மேலிட குழுவினர் மதிப்பெண் வழங்கி பட்டியல் தயார் செய்துள்ளனர். டில்லி காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுக்கு, இந்த அறிக்கை சுமர்பிக்கப்படவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.