கடலூர்: கடலூர் அடுத்த சோனங்குப்பம் கடற்கரையில் கரை ஒதுக்கிய 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தால் ஆன புத்தர் சிலை, கடலூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி "சுனாமி' தாக்கியதில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். சுனாமியின் போது அலையில் அடித்து வரப்பட்ட மரத்தால் ஆன நான்கரை அடி உயரம் கொண்ட இரண்டு கைகளும் இல்லாத புத்தர் சிலை ஒன்று 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி கடலூர் அடுத்த சோனங்குப்பம் கடற்கரையில் ஒதுக்கியது.
கடலூர் தாலுகா அலுவலக, பதிவேடுகள் அறையில் வைத்து பாதுகாத்து வரப்பட்ட இந்த புத்தர் சிலையை கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க வருவாய் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, கடலூர் தாசில்தார் ராஜாராம், மண்டல துணை தாசில்தார் மகேஷ், தலைமையிடத்து துணை தாசில்தார் முரளிதரன் ஆகியோர் கடலூரில் உள்ள அரசு அருங்காட்சிய காப்பாச்சியர் சுவுந்திரபாண்டினிடம் நேற்று மாலை ஒப்படைத்தனர்.
சவுந்திரபாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், "சுனாமியின் காரணமாக இந்த சிலை நாகப்பட்டினத்திலிருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம். 10ம் நூற்றாண்டில் நாகப்பட்டினம் பகுதியில் புத்தவிகாரங்கள், புத்த செப்பு திருவோடுகள், கற்சிலைகள் இருந்துள்ளன. இதனால் இந்த மரச்சிலை நாகப்பட்டினத்திலிருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.