பழநி: பழநி கோயில் தைப்பூசத்திருவிழாவின், மூன்று நாட்களில், 2 கோடியை 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வசூல் கிடைத்துள்ளது.ஐந்து நாட்களுக்கு பின், இன்று முதல் தங்கத்தேரில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. பழநி கோயில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். பலர் அழகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். மலை கோயிலில் தரிசனத்திற்கு பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்தனர். சிறப்பு நாட்களில் தரிசன டிக்கெட் ரூ.10ல் இருந்து 20 ஆகவும், ரூ.100டிக்கெட் ரூ.200 ஆகவும், ரூ.150 டிக்கெட் ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டது. அதிகளவில் பக்தர்கள் சிறப்பு தரிசன வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மூன்று "வின்ச்'களில் இரண்டு மட்டுமே பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயங்கியது.
வசூல்: ஜன.,25,26,27 ஆகிய 3 நாட்களில் மட்டும், தரிசன, அபிஷேக, அர்ச்சனை டிக்கெட்டுகள், பஞ்சாமிர்த விற்பனை, ரோப்கார், வின்ச் இவற்றின் மூலம் 2 கோடியை 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது. இத்தொகையில் உண்டியல் வசூல் அடங்காது.
இன்று தங்கத்தேர்: தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு ஜன.,25 முதல் 29 வரை நிறுத்தப்பட்டிருந்த சின்னக்குமார சுவாமி தங்கத்தேரில் உலாவரும் நிகழ்ச்சி, இன்று முதல் வழக்கம் போல் இரவு 7 மணிக்கு நடக்கிறது.
கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""எந்தாண்டும் இல்லாத அளவிற்கு கடந்த ஜன., 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. உண்டியல் வசூல் ரூபாய் 3 கோடி ரூபாயை எட்ட வாய்ப்புள்ளது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.