சென்னை: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, பயிர் பாதிப்பிற்கான நிவாரணம் வழங்குவது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருடன், ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில், தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழைகள் பொய்த்து விட்டன. டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை, காவிரியில் இருந்து தர மறுத்து வருவதால், குறுவையைத் தொடர்ந்து, சம்பா பயிரும் பாதிப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக, பாதிப்படை ந்த பயிர்களுக்கு, பேரிடர் நிதியில் இருந்து, 5,000 ரூபாய் மற்றும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக, 8,692 ரூபாய் என, 13 ஆயிரத்து 692 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். பயிர் பாதிப்பை ஆய்வு செய்து, வட்டவாரியாக பாதிப்பு மதிப்பை அளவிட, நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவினர், பொங்கலுக்கு முன்னதாக, டெல்டா மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். வருவாய்த் துறை, வருவாய் நிர்வாகத் துறை அதிகாரிகள், தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் கூடி, ஆலோசனை நடத்தினர். அதன் பின், விரிவான பயிர் பாதிப்பு அறிக்கையை தயாரித்து, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று சமர்ப்பித்தனர். இது தொடர்பாக, சேகரிக்கப்பட்ட ஆதாரங்களையும் அளித்தனர். விவசாயிகளுக்கு பயிர் பாதிப்புத் தொகை வழங்குவது குறித்து, உயர்மட்டக் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார். அறிக்கையின் அடிப்படையிலான, நிவாரணத் தொகை அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகும் என, தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.