மதுரை: தமிழக அரசு பஸ்களுக்கான டீசல், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. சமீபத்தில், மொத்த கொள்முதல் டீசல் விலையை லிட்டருக்கு, 11.81 ரூபாயாக, அந்நிறுவனங்கள் உயர்த்தின. விலை உயர்வால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்படும்.
கூடுதல் செலவை சமாளிக்க, தனியார், "பங்க்' களில், அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்பப்பட்டு வருகிறது. காலை நேரங்களில், டீசல் நிரப்ப, அரசு பஸ்கள்"பங்க்'களுக்கு சென்றதால், தமிழகத்தின் பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பல "பங்க்'களில், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டது.தனியார் "பங்க்' களில் டீசல் நிரப்புவது, நடைமுறையில் பல சிக்கல்களை உருவாக்கி உள்ளது. வசூல் இல்லாத இரவு நேர பஸ்களை ரத்து செய்ய, போக்குவரத்து கழகங்அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக, ஊழியர் சங்கங்கள் தெரித்தன.