மதுரை: இயக்குனர் அமீர் இயக்கி, நடிகர் "ஜெயம்' ரவி நடித்து வெளிவரவுள்ள "ஆதிபகவன்' திரைப்படத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள இப்படத்தில், இந்து கடவுள்களை தவறாக சித்தரிக்கும் சில காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும்; திரையிடுவதற்கு முன், இந்து அமைப்புகள், கட்சிகளிடம் காண்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று முன் தினம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஐகோர்ட் வக்கீல்கள் புகார் அளித்தனர். இதே கருத்தை வலியுறுத்தி, மாவட்டந்தோறும் இந்து அமைப்புகள் சார்பில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இந்து இளைஞர் பேரவை அமைப்பாளர் பார்த்தசாரதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.