கல்லல்: அரசு விடுமுறை, பயிற்சி என, ஜனவரியில் 22 நாட்கள், ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிகளில் பருவமுறை கல்வி திட்டத்தில், பாடம் கற்பிக்கின்றனர். மூன்றாம் பருவ வகுப்புகள், ஜன., 2 ல் துவங்கின. ஜனவரியில், 13 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை, அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் 9 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனால், அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. ஒட்டு மொத்தமாக, 22 நாட்கள் பள்ளிக்கே செல்லவில்லை. இதனால், மூன்றாம் பருவ துவக்கத்திலேயே, பாடம் கற்பிக்க முடியவில்லை. பிப்ரவரி, மார்ச் மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கல்வி அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்ட பணிகள்
உள்ளன. இதனால், இறுதி தேர்வுக்கு தனிக்கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இவ்வாண்டு துவக்கத்திலேயே ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்றுவிட்டோம். சனி தோறும், அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி நடக்கிறது. பள்ளிக்குச் செல்வதே அரிதாகி விட்டது. மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பிக்க முடியும்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.