சின்னமனூர்: வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, தேனி குச்சனூர், அ.தி.மு.க., பிரமுகர் தங்கமணி, கடத்தல் நாடகம் நடத்துவதாக, போலீசார் சந்தேகிக்கின்றனர். தங்கமணி, 50, குச்சனூர் அ.தி.மு.க., அவைத் தலைவராக உள்ளார். இவரை திருமங்கலத்தை சேர்ந்த சரவணன், 36, மற்றும் நான்கு பேர் காரில் கடத்திச் சென்றுவிட்டதாக, அவரது மனைவி ஈஸ்வரி, நேற்று புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் வினோஜி தலைமையில் போலீசார், தங்கமணியை தேடி வருகின்றனர்.
காரணம் என்ன: வேலை வாங்கித் தருவதாக மதுரை, திண்டுக்கல், தேனியை சேர்ந்த பலரிடம், தங்கமணி, 40 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார்; ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இது குறித்து, பலர் ஏற்கனவே பிரச்னை செய்து வருகின்றனர். இந்நிலையில், திருமங்கலத்தை சேர்ந்த சரவணன் என்பவரிடமும் வேலை வாங்கித் தருவதற்கு, 4 லட்ச ரூபாய் பெற்றுள்ளார்; திருப்பி கேட்டபோது, தரவில்லை. இதனால், நான்கு பேருடன் வந்த சரவணன், தங்கமணியை காரில் ஏற்றி சென்றார். பணம் தராததால் சென்னைக்கு அழைத்துச் செல்வதாகவும், பணத்திற்கு ஏற்பாடு செய்தால் விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளார். பணம் கொடுக்க தங்கமணி ஒப்புக் கொண்டார். எனவே விழுப்புரத்திலிருந்து திரும்பினர். திண்டுக்கல் வந்தபோது, காரிலிருந்து இறங்கிய தங்கமணி மாயமானார். இத்தகவலை தங்கமணி மனைவி ஈஸ்வரியிடம், சரவணன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஈஸ்வரி போலீசில் புகார் செய்துள்ளார்.
கடத்தல் நாடகமா: கடத்தப்பட்டதாக கூறப்படும் தங்கமணி, விடுவிக்கப்பட்ட மறு நாளிலிருந்து போடியில் இருந்ததாகவும், இரவில் குச்சனூருக்கு வீட்டிற்கு வந்து விட்டுத்தான் செல்கிறார் எனவும், போலீசிற்கு தகவல் கிடைத்துள்ளது. வேலைக்காக பணம் கொடுத்தவர்களிடமிருந்து தப்பிக்கவே, இந்த கடத்தல் நாடகம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.