கடலூர்: தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் அமைச்சர் சம்பத் உட்பட, ஐந்து பேர், நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.
கடந்த சட்டசபை தேர்தல், கடலூர் தொகுதி வேட்பாளராக, சம்பத் போட்டியிட்டார். இவருடன், மேலும் ஐந்து பேர், இறுதி கட்ட பிரசாரத்தின் போது, விதிமுறை மீறி, மாலை, 5:00 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக, அவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராகி, ஜாமின் பெற்றனர். அதைத் தொடர்ந்து, கடந்த, 22ம் தேதி, கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இவர்கள் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் சம்பத் உள்ளிட்டவர்களுக்கு, மாஜிஸ்திரேட் சுகந்தி, குற்றப்பத்திரிகை நகல் வழங்கினார்.
வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் சம்பத் உட்பட, ஐந்து பேர் ஆஜராயினர். அவர்களிடம், "தேர்தல் விதிமுறை மீறி ஐந்து பேரும் பிரசாரம் செய்துள்ளீர்களா?' என கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் சம்பத், "நாங்கள் குற்றம் செய்யவில்லை; எனவே, வழக்கை நடத்துகிறோம்' என்றார். அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் சுகந்தி, இந்த வழக்கை, வரும், 5ம் தேதிக்கு, ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.