கொடைக்கானல்: கொடைக்கானல் விண்இயற்பியல் ஆய்வு மைய தலைமை விஞ்ஞானி கே.சுந்தரராமனுக்கு, சிறந்த பேராசிரியருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. கொடைக்கானலில் 1899 ஏப்.,1 முதல் விண்இயற்பியல் ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சூரியனைப்பற்றிய ஆய்வு முக்கியமாக நடத்தப்படுகிறது.
மைய தலைமை விஞ்ஞானி கே.சுந்தரராமன் நிருபர்களிடம் கூறியதாவது: கொடைக்கானல் விண்இயற்பியல் ஆய்வு மையத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் விண்ணியல் பற்றிய உயர்கல்விக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. பி.இ., பி.டெக்., எம்.எஸ்.சி., மற்றும் பி.எச்.டி., பயிலும் மாணவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கிறார்கள்.அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்தும் பி.எச்.டி., மாணவர்கள், குறுகிய காலபயிற்சிக்காக இங்கு வருகின்றனர். இந்திய- அமெரிக்க உயர்கல்வி மாநாடு, ஆந்திர அரசு சார்பில், ஐதராபாத்தில், வரும் பிப்., 1 முதல் 3 வரை நடக்கிறது.
அமெரிக்க, இந்திய விஞ்ஞானிகள், உயர்கல்வி இருநாடுகளிலும் எவ்வாறு அளிக்கப்படுகிறது என விவாதிக்க உள்ளனர். வெளிநாடுகளில் (குறிப்பாக அமெரிக்காவில்) உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு, இம்மாநாடு பயன்படும். மாநாடு குறித்த விபரங்களை, www.indus.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இம்மாநாட்டில் விஞ்ஞானி சுந்தரராமனுக்கு சிறந்த பேராசிரியருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.
சூரியப்புயல்: சில ஆண்டிற்கு முன் "சூரியப்புயல்' குறித்து செய்த ஆய்வுக்காக தமிழக அரசின் விருது பெற்றுள்ளார். இவரை, "சூரியப்புயல்' விஞ்ஞானி என அழைக்கின்றனர்.
சூரியப்புயல் என்றால் என்ன?
சூரியனின் தென்கிழக்குப்பகுதியில், ஒரு சூரிய புள்ளிக்கூட்டம் உருவாகியுள்ளது. மையப்பகுதியில் இரண்டு புள்ளிக்கூட்டம் தென்படுகிறது. இந்த சூரியப்புள்ளிகளால் காந்தப்புயல் உருவாகும்போது, அது சூரிய புயல் எனப்படுகிறது.
சூரியப்புயல் உருவானால் பூமிக்கு பாதிப்பா?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 15 கோடி கி.மீ., எனவே, சூரியப்புயல் உருவாகி, அது பூமியின் காந்தப்புலத்தை ஊடுருவ பல மணி நேரமாகும். அப்படியே ஊடுருவினாலும், மனிதர்களுக்கு பாதிப்பு இருக்காது. வட மற்றும் தென் துருவங்களுக்கு அருகில் உள்ள நாடுகளில் உள்ள மின்நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பாதிக்கச்செய்யும். சில நேரங்களில் செயற்கைக்கோள்களும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
இந்தியாவை பாதிக்குமா?
நமது நாடு, பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் இந்தியாவை துளிகூட பாதிக்காது. இந்தியாவைப்போன்றே, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளையும் பாதிக்காது. இவ்வாறு விஞ்ஞானி கே.சுந்தரராமன் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.