மதுரை: பஸ்களில் குற்றங்களை தடுக்க, டில்லி, புதுச்சேரியை போன்று, தமிழகத்திலும் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டில்லியில், மருத்துவ மாணவி பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த டில்லி மாநில அரசு உத்தரவிட்டது.
இதை பின்பற்றி, நேற்று முன்தினம் புதுச்சேரி மாநிலத்திலும் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
தமிழகத்தில், இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டாலும், அரசு ஆர்வம் காட்டவில்லை. சில மாதங்களுக்கு முன், ஆந்திரா கம்மம் பகுதியில் இருந்து, சென்னை வந்த அரசு விரைவு பஸ்சில், 3 பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். அதேபோல், அடிக்கடி பஸ்களில் பயணிகளின் உடைமைகளும் திருடு போவதும் தொடர்கிறது. பயணிகளின் "பிரைவசி' பாதிக்காத வகையில், பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தால், கொலை, கொள்ளைகளை கட்டுப்படுத்தியிருக்கலாம். தனியார் பஸ்களுக்கு முன்உதாரணமாக, அரசு விரைவு பஸ்களில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். பஸ்சில், பயணிகள் ஏறுமிடத்திலும், கடைசி "சீட்' பகுதியிலிருந்து டிரைவரை நோக்கியும் கண்காணிப்பு கேமரா வைக்கலாம்.
இதன்மூலம், குற்றங்களில் ஈடுபடுவோரையும், சந்தேகத்திற்குரிய நபர்களையும் கண்காணிக்க முடியும். இதுகுறித்து, தமிழக அரசு பரிசீலித்து செயல்படுத்தினால், பயணிகளுக்கு பயணம் பாதுகாப்பனதாக அமையும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.