சிவகங்கை: மானாமதுரையில் சிறை சென்று திரும்பிய பெண், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். சிவகங்கை, மானாமதுரை, கீழத்தெருவை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மனைவி ஈஸ்வரி, 35. குடும்ப பிரச்னையில், 2012 அக்டோபரில் கணவரை ஈஸ்வரி வெட்டி கொலை செய்தார். ஈஸ்வரிக்கு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
6 மாதமாக சிறையில் இருந்த அவர், ஒரு வாரத்திற்கு முன் ஜாமினில் வந்தார். நேற்று மாலை வீட்டில் ஈஸ்வரி தனியாக இருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் புகுந்து, கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பினர். கணவரை கொன்றதால், பழிக்கு வாங்கும் நோக்கில், அண்ணாத்துரையின் உறவினர்களே இக்கொலையை செய்திருக்கலாம், என்ற கோணத்தில் மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.