திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திற்குள் நுழைய பா.ம.க., நிறுவனர் ராமதாசிற்கு தடை விதிக்க வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் கலெக்டர் மற்றும் எஸ்.பி., யிடம் மனு அளித்தனர். திண்டுக்கலில் நாளை (ஜன.31) பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ்,கொங்குநாடு முன்னேற்றக்கழக மாநில பொது செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஜாதி சங்க கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் இதுபோன்ற கூட்டத்திற்கு அனுமதி அளித்தால்
சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த கூட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்வதோடு, திண்டுக்கல்லுக்குள் நுழைய ராமதாசிற்கு தடை விதிக்க வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் மாவட்ட செயலாளர் வில்லவன் கோதை தலைமையில் கலெக்டர் வெங்கடாசலம், எஸ்.பி.ஜெயச்சந்திரனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து கலெக்டரிடம் மனு தந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.