Advertisement
பகுதி நேர பள்ளிகள் அமைக்க இடம் பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

இடம் பெயர்ந்தோரின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு, அந்தந்த பகுதிகளில் பகுதி நேர பள்ளிகள் அமைக்க வேண்டும் என, வெளிமாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், ஆந்திரா, பீகார், கர்நாடகா, உத்திரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, இடம் பெயர்ந்து, 10 லட்சத்திற்குமேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், பாதிக்கு மேற்பட்டோர், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடம்பெயர்ந்து வாழ்வோருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எந்த பாதுகாப்பு வசதியும் இங்கு இல்லை. இது குறித்த, கருத்தரங்கு, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், சென்னையில் வசிக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

அவர்கள் கூறியதாவது: சொந்த மாநிலத்தில் வாழ முடியாமல், வேலைக்காக சென்னை வந்துள்ளோம். நாங்கள் வேலை பார்த்தாலும், எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என, எண்ணுகிறோம். ஆனால், மொழிப் பிரச்னை பெரும் சிக்கலாக உள்ளது. அதனால், படிக்க வைக்கும் எண்ணம் இருந்தும், படிக்க வைக்க முடியவில்லை. பெரிய கட்டடங்கள் அமைக்கும் இடங்களில், தொடர்ச்சியாக வேலை செய்வோம். ஒரு இடத்தில், கட்டுமானப் பணிகள் முடிவதற்கு ஒரு ஆண்டாகும். கிழக்கு கடற்கரை சாலையில், பல ஆயிரக்கணக்கான வெளிமாநிலத்தோர், பல்வேறு கட்டடங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே, அதிக அளவில் வெளிமாநிலத்தவர் பணிபுரியும் இடங்களில், அந்தந்த மொழியில் பாடம் நடத்தும் பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும். குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு, இலவச அரிசி வழங்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட அளவிலாவது விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது, இலவச அரிசியை, ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.